இடிகளில் சிக்கும் விலங்குகள்!

இராஜ்குமார்
Wed Jan 13 2016 23:54:25 GMT+0300 (EAT)

மனிதர்களைப் போலவே விலங்குகளும் இடியால் பாதிக்கப்படுகின்றனர் என அண்மைய ஆவண அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. மெரைன் மாமல் சயன்சு சனவரி பதிப்பில் வெளியிடப்பட்ட விலங்குகளின் இறப்புப் பற்றிய குறிப்பில் இதனைத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகில் ஒரு நாளில் சுமார் நொடிக்கு 100 இடிகள் என்ற வகையில் வெப்பமான பகுதியில் இடிவிழுகிறது. 2,40,000 மக்கள் ஆண்டிற்கு இடியால் காயமடைகின்றனர்; 24,000 மக்கள் உயிரிழக்கின்றனர். விலங்குகளும் இதற்கு விதிவிலக்கின்றி இறக்கின்றது என கூறிப்படுகிறது. படத்தில் உள்ளது இடியில் காயமடைந்து தப்பித்த அசுத்திரேலிய கடற்கரையில் வாழும் காட்டெருது ஆகும்.