மூதா விண்மீன்களின் எச்சமா? - புதிதாக கண்டறியப்பட்ட வாயு மண்டலம்

இராஜ்குமார்
Tue Jan 12 2016 20:48:30 GMT+0300 (EAT)

புதிதாக கண்டறியப்பட்ட வாயு மண்டலம் ஐதரசன் மற்றும் கீலியம் மட்டுமே கொண்டு உள்ளே வேறெதுவும் இல்லாமல் காணப்படுகிறது. கனமான தனிமங்கள் பற்றாக்குறையாக இருப்பது அண்டபெருவெளியின் முதல் மூதா விண்மீன்களின் எச்சமென உணர்த்துகிறது.


சனவரி 8, 2016 அன்று அமெரிக்க வானியல் குழுமக் கலந்துரையாடலில் சான் ஓ மியேரா அவர்கள் அறிக்கை செய்தார். இந்த மூதா விண்மீன்கள் பிரபஞ்சப்பெருவெளியில் ஐதரசன், கார்பன் மற்றும் பிற வேறுபடும் தனிமங்களின் முதற்கட்ட அளவை செலுத்துவதால் நேரடியாக இதனை இதுவரை கண்காணிக்கப்படாமல் அறிஞர்கள் மேலும் இதனைப்பற்றி நன்கு அறிந்து கொள்ள விரும்புகின்றனர்.