பல்லுயிர்மியாக்கம் எவ்வாறு நிகழ்கிறது?

இராஜ்குமார்
Mon Jan 11 2016 23:34:50 GMT+0300 (EAT)

800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, ஓருயிர்மி மூதாவுயிர்களில் இருந்து முதல் பல்லுயிர்மி உயிரினங்கள் உருவானது. இந்த நிகழ்வு அதன் பரிணாம வளர்ச்சியின் போது குறைந்தது 24 முறையாவது நிகழ்ந்திருக்கும். இலைஃப் இதழில் வெளியான ஆய்வின்படி, இந்த மாற்றத்திற்கு காரணியானது மெய்ம்மி (திசு) வளர்ச்சியில் பங்காற்றும் GKPID என்னும் மூலக்கூறு ஆகும்.


சீரைமைக்கப்பட்ட கட்டமைப்பை உருவாக்கவும், நன்கு உயிர்மி பிரிவடையவும் ஏற்றவாறு உயிர்மி மூலக்கூறின் உட்புறத்தில் உயிர்மி பிரிவு ஏற்படும் போது நிறமிகள் பின்னும் புரதங்களுடன் 
GKPID இணைந்துள்ளதை சிக்காக்கோ பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியலாளர் சோசப் தார்ண்டன்னும் அவரின் உடன்பணியாளர்களும் கண்டறிந்துள்ளனர்.