ஒளி வினையூக்கிகள்

முனைவர். ஆர் சுரேஷ்
Wed Jan 06 2016 22:22:49 GMT+0300 (EAT)

“சுடர் விளக்காயினும் தூண்டுகோள் அவசியம்” என்பது பழமொழி. இப்பழமொழி, ஒரு வினையில் வினையூக்கியின் அவசியத்தை எடுத்துரைக்கின்றது. அதாவது, ஒரு சுடர்விளக்கை எடுத்துக்கொண்டால், அதிலுள்ள திரியிம், எண்ணெயும் நெருப்பும் ஒன்றுடன் ஒன்று வினைபட்டு தொடர்ந்து ஒளியையும், பிற வினைவிளை பொருட்களையும் தருகின்றது. இவ்வினையின் மூலம் தொடர்ந்து ஒளி கிடைக்க  தூண்டுகோள் அவசியம். ஆனால், தூண்டுகோள் திரியுடனும் எண்ணெயுடனும் எந்த வினையிலும் ஈடுபடுவதில்லை. பிரகாசமான ஒளி கிடைக்கவே இத்தூண்டுகோள் பயன்படுகிறது. எனவே, தூண்டுகோளை வினையூக்கி எனலாம்.


C:\Users\Suresh\Desktop\1.tif


கீழ்காணும் வேதிச்சமன்பாட்டை காண்க.

இவ்வினையில், கார்பன் மோனாக்சைடு, ஹட்ரஜன் வாயு உடன் அதிக வெப்ப மற்றும் அழுத்த நிலையில் வினைபட்டு மெத்தனாலை தருகின்றது, சிறிதளவு ZnO-Cr2O3 நானோத்துகளை இவ்வினையில் சேர்த்தால், இவ்வினையின் வேகம் குறிப்பிட தகுந்த அளவு அதிகரிக்கின்றது. எனவே, ZnO-Cr2O3 நானோத்துகளை வினையூக்கி என்கின்றோம்.

சரி, வினையூக்கியை எவ்வாறு வரையறுப்பது?

வினையூக்கி என்பது ஒரு வேதிசேர்மம். மிகக்குறைந்த அளவே பயன்படுத்தப்படும் இச்சேர்மம், வினையில் ஈடுபடுவதில்லை. ஆனால், அவ்வேதிவினையின் வேகத்தை மட்டும் அதிகரிக்க செய்கின்றன.

ஆனால், ஒளி வினையூக்கி என்றால் என்ன? ஒளி வினைகளில் வினையூக்கிகளாக பயன்படுத்தப்படும் வேதிசேர்மங்களை ஒளி வினையூக்கி என்கின்றோம். உதாரணமாக மெத்திலீன் நீலச்சாயம், ஒளி முன் சிதவடையும் வினையை கூரலாம். இவ்வினையின் வேகம் மிகவும் குறைவு. நாம், TiO2 நானோத்துகளை சிறிதளவு சேர்த்தால், இவ்வினையின் வேகம் மிகவும் அதிகரிக்கின்றது. அதாவது, மெத்திலீன் நீலச்சாயம் விரைவில் ஒளி முன் சிதைவடைகின்றது. இந்த வினையில், TiO2 நானோத்துகளை  ஒளி வினையூக்கி என்கின்றோம்.

சரி, தற்பேது ஒளி வினையூக்கிகள் எவ்வாறு ஒளி வினைகளின் வேகத்தை அதிகரிக்கின்றது என்பதை காண்போம்.ஒளி வினையூக்கி முன்னிலையில் நிறமிகள் ஒளி சிதைவடைவதற்கான வினை வழிமுறை.

ஒளி வினையூக்கியின் விலக்கப்பட்ட ஆற்றல் இடைவெளிக்கு ஏதுவான ஒளியை (கண்ணுறு ஒளி அள்ளது புற ஊதாக் கதிர்) வினைகளனில் செலுத்தினால், அவ்வினையூக்கி ஒளியை உறிஞ்சுகின்றது. எதனால், இனணதிறன் பட்டையில் உள்ள எலக்ட்ரான்காள், அதன் கடத்து பட்டைக்கு தாவுகின்றது. இதன் விளைவாக, இனணதிறன் பட்டையில் ”மின் துளைகள்” உருவாகின்றது. இந்த மின் துளைகள்எலக்ட்ரான் இணைகள், ஆக்சிஜன் மூலக்கூறுடனும், நீருடனும் வினைபட்டு அதிக வினைதிறன் கொண்ட தனி உருப்புகளை உருவாக்குகின்றது. இந்த தனி உருப்புகள் நிறமிகளை சிதைவடையச் செய்கின்றன.

TiO2, ZnO, Fe2O3, V2O5 முதலிய பல்வேரு வகையான நானோசேர்மங்களை ஒளி வினையூக்கிகளாக, நிறமிகளை ஒளி சிதைவடயும் வினைகளில் பயன்படுத்த முடியும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், சுற்றுசூழலை பாதிக்காத வகையிலும், அதிக ஒளிச்சிதைவு திறன், குரைந்த செலவில் தயாரிக்ககூடியதுமான ஒளி வினையூக்கிகளை கண்டறியும் பணியில் ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.