இரும்பு(III) ஆக்ஸைடு நானோத்துகள்

முனைவர். ஆர் சுரேஷ்
Wed Jan 06 2016 22:21:53 GMT+0300 (EAT)

இரும்பு, துருவாக மாறும் என்பதை அனைவரும் அறிவர். இத்துருவின் வேதியியல் பெயர், இரும்பு(III) ஆக்ஸைடு ஆகும். இரும்பு(III) ஆக்ஸைடின் வேதியியல் குறியீடு, Fe2O3 ஆகும். இயற்கையில், நாம் உலேக இரும்பினை அதன் தாதுவான ’ஏமடைட்’ என்ற தாதுவிலிருந்து பெருகின்றோம். இத்தாதுவும் இரும்பு(III) ஆக்ஸைடு (Fe2O3) தான்! ஆனால், இவைகள் எல்லாம் ’மொத்த’ நிலையில் உள்ளன. பொதுவாக, ஒரு சேர்மம், அதன் ’மொத்த’ நிலையிலிருந்து ’நானோ’ நிலைக்கு மாற்றும் பொழுது அச்சேர்மத்தின் பண்புகள் பெருமளவு வேருபடும். இதன் காரணமாக நானோ நிலையில் உள்ள சேர்மத்தின் பயன்பாடுகள் அதிகரிக்கின்றன.

இதன் அடிப்படையில், இரும்பு(III) ஆக்ஸைடை (Fe2O3) நானோ நிலையில் தயாரிக்க ஆராயிச்சியாளர்கள் பெருமளவு ஆர்வம் காட்டுகின்றனர். Fe2O3 நானோத்துகளை தயாரிக்க இதன் துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள், பல வகையான தயாரிப்பு முறைகளை வெளியிட்டுள்ளனர். உதாரணமாக, நீராற் பகுப்பு முறை, எரித்தல் முறை, நீரற்ற கரைப்பான்களை பயன்படுத்தும் முறை, வெப்ப பகுப்பு முறை, சால்-ஜெல் முறை முதலிய முறைகளை கூறளாம்.

D:\Suresh\Manuscript details\Manuscript-History\M3 Fe2O3\JICS-Accepted\Figures\New Folder (2)\DSC01338.JPG

வெப்ப சிதைவு முறையில் தயாரிக்கப்பட்ட Fe2O3 நானோத்துகள்

ஆராயிச்சியாளர்களின், இந்த Fe2O3 நானோத்துகளின் மீதான, ஆர்வத்திற்க்கு காரணம், இதன் அதிக நிலைப்புத்தன்மையும், உயிரிகளுக்கு தீங்கற்ற பண்பு, மாறுநிலை ஆக்சிஜனேற்ற நிலை, மற்றும் எளிதில் தயாரிக்கும் முறையே!.

Fe2O3 நானோத்துகள் பல்வேரு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

கீழ்கானும் அட்டவனையில், Fe2O3 நானோத்துகளை பயன்படுதும் துறைகளும், பயன்படுத்தப்படும் விதமும், அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன.

வ. எண்

துறை

பயன்படுத்தப்படும் விதமும்

காரணம்

1.

ஊக்கவினைகள்

வினையுக்கியாக

அதிக கிளர்வு மையங்கள்

2.

சென்ஸார்ஸ்

மின் வாயாக

மின் கடத்தும்/ மாறுநிலை ஆக்சிஜனேற்ற பண்பு

3.

சூரிய மின்கலங்கள்


மின்வாயாக

ஒளியை உறிஞ்சும்

பண்பு

4.

எம்ஆர்ஐ இமேஜிங்


மருத்துவ காரணியாக

காந்த மற்றும் உயிரிகளுக்கு தீங்கற்ற பண்பு

5.

ஃர்ரோ நீர்மங்கள்

நீர்மங்களாக

காந்த பண்பு

6.

ஒளி வினையூக்க வினைகள்

ஒளி வினையுக்கியாக

ஒளியை உறிஞ்சும்

பண்பு

7.

மின்கலன்

மின்வாயாக

மின் கடத்தும் பண்பு

8.

மருத்துவ துறை

எதிர் நுண்ணுயிர் காரணி

நுண்ணுயிரிகளை அழிக்கும் பண்பு