“கார்பன் புள்ளி” – ஒரு புதியவகை கார்பன் நானோத்துகள்

முனைவர். ஆர் சுரேஷ்
Wed Jan 06 2016 22:16:45 GMT+0300 (EAT)

கார்பன் நானோப்பொருட்களின் புதிய வகையாக ”கார்பன் புள்ளி” கண்டறியப்பட்டுள்ளது, இதனை, ஆங்கிலத்தில் “C-dot” என்றழைக்கின்றனர். கார்பன் புள்ளியின் அளவு சுமார் 10 நானோ மீட்டருக்கும் குறைவாக இருக்கும். முதன் முதலில், கார்பன் புள்ளியை, 2004 ம் ஆண்டு, (Xu et al.) க்சு மற்றும் அவரது ஆய்வுக்குழுவினரால் கண்டபிடிக்கப்பட்டது. SWCNT (Single Walled Carbon Nanotube) யை மின்முனை கவர்ச்சி முறையில் சுத்தீகரிக்கும் பொழுது, இந்த ஆய்வுக்குழுவினர் கார்பன் புள்ளியை கண்டுபிடித்தனர்.


சமீபகாலத்தில், நானோதொழில்நுட்ப ஆராய்சியாளர்களால் பெரிதும் காவரப்பட்ட பொருளாக கார்பன் புள்ளி விளங்குகின்றது. இதற்கு காரணம், இதனுடைய பண்புகளும் அதனால் விளையும் பயன்களுமே! நீரில் கரையும் தன்மையும், ஒளிர்தல் பண்பும், மந்த நிலையும், குறைந்த நச்சுத்தன்மை, எளிதில் தயாரிக்கும் முறை, மற்றும் உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காத தன்மை, முதலிய பண்புகள், கார்பன் புள்ளியை பல்வேரு துறைகளிலும் பயன்படுத்த ஏதுவாக்குகின்றது.  


கார்பன் புள்ளியை கீழ்காணும் பல்வேரு துறைகளில் பயன்படுத்தி வருகின்றனர்.

1. பயோ இமேஜிங்

2. ஆப்டோஎலக்ட்ரானிக்ஸ்

3. ஒளி வினையூக்க வினைகள்

4. சென்ஸார்ஸ்

5. மருத்துவத் துறை


பொதுவாக, நானோப்பொருட்களின் இயற்பு பண்புகளை அதன் தயாரிப்பு முறைகள் பெருமளவு பாதிக்கின்றன. இதன் காரணமாக, நானோப்பொருட்களின் பயன்பாடுகளும் அதிகரிக்கின்றன. உதாரணமாக, வெப்ப சிதைவு முறையில் தயாரிக்கப்படும் ZnO நானோதுகளின் வினையூக்க பண்பு, அதன் பிற தயாரிப்பு முறைகளைக் காட்டிலும் அதிகம். இதன் அடிப்படையில், கார்பன் புள்ளியை தயாரிக்க பல்வேரு முறைகளை ஆராய்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதன் காரணமாக, கார்பன் புள்ளியின் பயன்பாடுகளும் அதிகரிக்கும் என்று நம்புகின்றனர், பொதுவாக, கார்பன் புள்ளியை தயாரிக்கும் முறைகளை இரு வகையாக பிரிக்கலாம். ஒன்று வேதிமுறைகள் மற்றொன்ரு இயற்பு முறைகள். சில வகை தயாரிப்பு முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


1. வேதிமுறைகள் – மின்வேதிமுறை, எரித்தல் முறை, அமில ஆக்சிஜ்னேற்ற முறை, மைக்கரோ அலைகளை பயன்படுத்தும் முறை, மற்றும் நீரேற்ற வெப்ப முறை.

2. இயற்பு முறைகள் – மின்னாற் சிதைத்தல் முறை, லேசர் நீக்கம் முறை மற்றும் பிளாஸ்மா சிகிச்சை முறை.


கார்பன் புள்ளியை பயன்படுத்தும் துறைகள்