சீனாவில் 3 பேருக்கு பறவைக் காய்ச்சல்

இராஜ்குமார்
Fri Apr 05 2013 16:27:19 GMT+0300 (EAT)

இதுவரை மனிதர்களிடம் காணப்படாத பறவைக் காய்ச்சல் நோய் சீனாவில் 3 பேரிடம் பரவியுள்ளது என்று சைனிசு டிசீசு கன்ரோல் அன்டு பிரிவன்சன் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. மார்சு 29 அன்று இந்த முகமை சங்காய் என்னும் ஊரில் வசிக்கும் இரண்டு ஆண்கள் மீது எச்7என்9 ஏவியன் இன்புளென்சா (H7N9 avian influenza) என்ற தீநுண்மம் (virus) தாக்கி இறந்தனர் என்றும், ஒரு பெண் கவலைக்கிடமாக இருக்கிறார் என்றும் உறுதி செய்தது.

இம்மூன்று நோயாளிகளுக்கும் உள்ள நோயின் அறிகுறிகள் இருமல், காய்ச்சல் அதன் பிறகு நுரையீரல் வீக்கம் (pneumonia) மற்றும் மூச்சுத் திணறல் போன்றவையாகும். இம்மூன்று பேர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், இந்த தீநுண்மம் ஒரு நபரிடம் இருந்து மற்றவருக்கு தொற்றும் படியானதாக தெரியவில்லை என்றும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது. உலக சுகாதார நிறுவனமும், சீனாவும் இது எப்படி இவர்களிடம் பரவியது என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை இவர்களின் தொடர்புள்ள 88 நபர்களுக்கு இத்தீநுண்மம் பரவவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேற்கோள்கள்