ஹென்னாவின் அறிவியல்

பி. சுரேஸ்
Sat Sep 12 2015 13:25:17 GMT+0300 (EAT)

எகிப்திராணிகளின் ஹென்னா:
 
மருதாணிக்கு ஹென்னா இ மெஹந்தி என்ற இந்திப் பெயர்களும் உண்டு.  உண்மையில் ஹென்னா என்பது மருதாணியின் பெரிஷியப் பெயர்.  அங்கிருந்து வந்ததுதான் மருதாணி.  இந்தியாவில் மட்டுமல்ல மத்திய ஆசியா இ ஆப்பிரிக்கா இ ஈரானியப் பெண்களும் மருதாணி இட்டுக்கொள்கிறார்கள்.  ஆனால் இந்தியக் கலாசாரத்தின் சடங்குகளின் மருதாணி இரண்டறக் கலந்துவிட்டது.  இதன் வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் மருதாணி சுமார் 9 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எகிப்திய கிரேக்க மக்களால் அழகுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.  எகிப்திய ராணிகள் தங்கள் அடிமைகள் மூலம் கை இ கால் உடல்களில் மருதாணி போட்டுக் கொண்டார்கள். 
 
லாசோனின் மாயம்:

 மருதாணியின் தாவரவியல் பெயர் லாசோனியா எனர்மிஸ் (டுயறளழnயை நநெசஅளை).  இதில் உள்ள லாசோன் (டுயறளழநெ) என்ற வேதிப்பொருள் தான் லாசோனியா என்ற பெயரைப் பெற்றுத்தந்தது.  இந்த லாசோன் தான் மந்திரம் போட்டு நம் கையை சிவப்பாக்கும் வித்தையைச் செய்கிறது.  இயற்கையின் லாசோன் நிறமற்ற பொருள்.   ஆனால் இலை தன் உருவம் இழந்து சிதைக்கப்பட்டுஇ சூரிய ஒளிஇ காற்றுப் பட்டு; இதன் மூலக்கூறுகள் (ஆழடநஉரடநள) இடம் பெயர்ந்து சிவப்பு நிறம் காட்டும் வேதிப்பொருளாக அவதாரம் எடுக்கின்றன.  மருதாணி அரைக்கும்போதே கை சிவந்துபோவது இதனால்தான்.
 லாசோன் என்பது மிகச்சிறிய மூலக்கூறு.  இதன் தாவர உயிர்மப் பொருள் (Pடயவெ ஆயவசiஒ)இ தோலுக்குள் முடியின் வேருக்குள் நுழைந்துவிடும்.  நம் தோலின் முடியின் தன்மைக்கேற்றவாறு நிறம் மாறுகிறது.
 தோலின் நிறமியான மெலனினை (ஆநடயnin) அல்லது முடியின் வண்ணத்துக்கான பொருளான கெரட்டினுக்கு (முநசயவin) சிவப்பு சாயம் பூசி விடுகிறது.  தற்காலிகமாக இரண்டறக் கலந்துவிடுகிறது.  மருதாணி அதிக நேரம் கைகளில் முகத்தில் இருந்தால் அடர்ந்த சிவப்பு நிறம் உண்டாகும்.

லாசோனின் வேதியியல் பெயர்:

 உங்கள் உடலின் வெப்பநிலையைப் பொறுத்து 3 வாரத்தில் சிவப்பு கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து முடிவில் காணாமல் போய்விடும்.  லாசோனின் வேதியியல் பெயர் 2-ஹைட்ராக்சிஇ 1இ4 நாஃப்தோகுயினோன் (2-hலனசழஒலஇ 1இ4-Nயிவாயழஙரiழெநெ) இதில் 10 கார்பனஇ; 6 ஹைட்ரஜனஇ; 3 ஆக்ஸிஜன் உள்ளது. 

மருதாணியில் ஹென்னாடானிக் அமிலம் (ர்நnயெயவழniஉ யுஉனை) உள்ளதால்தான் இதனை ஹென்னா என்று அழைத்தார்கள்.  ஆசியாஇ ஆப்ரிக்காஇ மத்திய தரைக்கடல் நாடுகள் தான் மருதாணியின் தாயகம்.  இது ஒரு குற்றுச் செடியானாலும் கொஞ்சம் உயரமாகவே வளருகிறது.  மருதாணி மஞ்சள் நிறத்திலிருந்து லேசான சிவந்த வண்ணப் பூக்கள் பூக்கிறது.

 மருதாணியில் சிவப்பு நிறம் தவிர நீலமஇ; கறுப்புஇ பச்சை வண்ணம் தரும் மருதாணி வகைகளும் உண்டு!  கறுப்பு மருதாணியில் நிலக்கரித் தாரில் (ஊழயட – வுயச)  உள்ள பாரா-பினைல்டையமின் (p-Phநலெடனயைஅiநெ) பயன்படுத்தப்படுகிறது.  நம் தலையில் வளரும் வெள்ளைமுடியைக் கருப்பாக்கும் டையில் இதுதான் பயன்படுத்தப்படுகிறது.