கம்பியில்லா மின்னேற்றி

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:53:18 GMT+0300 (EAT)

அலைபேசி நம் வாழ்வில் இன்றியமையாததாகிவிட்டது. நாள் முழுவதும் பேசுவதற்கு மட்டும் இன்றி குறுஞ்செய்தி அனுப்புவதற்கும் விளையாடுதற்கும் இணையதளத்திற்கும் அலைபேசியை உபயோகிக்கிறோம். சில நேரங்களில் அன்றைய தினம் முடிவதற்கு முன்பே அலைபேசியின் பேட்டரி முடிந்துவிடுகிறது. அப்போது மின் ஏற்றி(சார்ஜர்) தேவைப்படுகிறது. இது நாள் வரை மின்னேற்றியை ஆற்றல் குறைந்த மின்னணுக் கருவியுடன் மின்கம்பி(வையர்) மூலம் இணைத்து தான் மின் ஊட்டப்பட்டது. ஆனால் இப்போது மின்கம்பி இல்லாமலேயே மின்சாரத்தை ஊட்டிக் கொள்ளலாம். அதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டது தான் கம்பியில்லா மின்னேற்றி. மைகேல் ஃபாரடே அவர்கள் கண்டுபிடித்த மின் காந்த தூண்டல் முறையை பிரயோகித்து மின்சாரத்தை உருவாக்க முடியும். அதாவது ஒரு காந்தப்புலத்தை மாற்றும் போது அதன் அருகாமையில் இருக்கும் மின்சுற்றில்(சர்க்யூட்) மின்சாரம் தூண்டப்படுகிறது.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------