சூரிய ஆற்றலில் இயங்கும் குளிர் சாதனம் மூன்று மாதங்கள் வரை உணவை பராமரிக்கும்

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:51:51 GMT+0300 (EAT)

ெப்பம் மிகுதியான பகுதிகளில் உணவைப் பராமரிக்கச் சூரிய ஆற்றலைக் கொண்டு இயங்கும் குளிர் சாதனத்தை மெக்சிகோவின் தொழில்நுட்பத்தைக் கொண்டு கண்டுபிடித்திருக்கிறார் எல்வியா டொலெடொ ஃப்லோர்ஸ். ப்யூப்லா பல்கலைகழகத்தின் ஆராய்ச்சி கூடத்தில் உருவாக்கப்பட்ட  இந்தச் சாதனம் குறைவான ஆற்றலைக் கொண்டு இயங்குகிறது. இதன் சிறப்பம்சங்கள்- மூன்று மாதம் வரை உணவைப் பராமரிக்கும், விலையும் குறைவு. குளோரோபுலோரோகார்பன் எனும் பசுமைக்குடில் வாயுவை இது வெளியேற்றாது. ஆதலால் சுற்றுச்சூழலுக்குப் பாதுகாப்பானது. தற்சமயம் 3 மாதம் வரை நீரை 9 வெப்ப அலகில்(டிகிரி சென்டிகிரேட்) வைத்திருக்கும். ஒன்பதிலிருந்து ஐந்தாகக் குறைக்க முயற்சிகள் செய்து வருகிறார் எல்வியா. 5 வெப்ப அலகில் மீனின் புருதங்கள் முழுமையாப்க பராமரிக்கப்படும் என்று கூறுகிறார்.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------