மருத்துவத்தில் பயன்படும் கஞ்சா

ஜெயஸ்ரீ
Sun Apr 26 2015 05:51:01 GMT+0300 (EAT)

கஞ்சா என்று சொல்லப்படும் போதைப் பொருளில் பல மருத்துவக் குணங்கள் அடங்கி இருக்கின்றன. ஆனால் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டிருக்கிறது. இதன் மருத்துவக் குணங்களை அறிந்து இப்போது சில நாடுகள் மருத்துவ ரீதியாக மட்டும் பயன்படுத்த அனுமதி அளித்திருக்கின்றன. அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மருத்துவத்திற்காக்க் கஞ்சா பயன்படுத்த அரசு அனுமதி அளித்திருக்கிறது. புற்றுநோயால் ஏற்படும் வலி, பதற்றம் போன்ற பல வியாதிகளுக்குக் கஞ்சா மருந்தாகிறது. விஞ்ஞானிகள் கஞ்சாவைப் பற்றி ஆராய பல சட்டரீதியான சம்பிரதாயங்களைத் தாண்ட வேண்டியுள்ளது. இவர்கள் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிரக் அப்யூஸ்(என்.ஐ.டி.ஏ) இடம் இருந்து கஞ்சாவை வாங்குகின்றனர். என்.ஐ.டி.ஏ, மிசிசிப்பி பல்கலைக்கழகத்துடன் மருத்துவ உபயோகத்திற்காகக் கஞ்சா வளர்க்க ஒப்பந்தம் செய்துள்ளது.----------------------மேலும் இக்கட்டுரையை படிக்க புதிய அறிவியல் ஏப்பிரல் 2015 இதழை வாங்கி படிக்கவும்------------------------------