ஒளி மாசுபாடு - ஒரு கண்ணோட்டம்

முனைவர். ஆர் சுரேஷ்
Sun Apr 26 2015 05:44:12 GMT+0300 (EAT)

கடந்த சில ஆண்டுகளாக, மாசுபாடு, உலகவெப்பமயமாதல், ஒசோன் ஓட்டை போன்ற பல்வேறு வகையான உலகலாவிய பிரச்சினைகளை, நாம் எதிர்கொண்டு வருகின்றோம். குறிப்பாக, சுற்றுப்புற மாசுபாடு நம்மை வெகுவாக பாதித்துள்ளது. சுற்றுப்புற மாசுபாட்டினை பல்வேருவகையாக பிரிக்கலாம். அவை முறையே, காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு மற்றும் மண் மாசுபாடு ஆகும். இவை தவிர, மற்றொரு தீவிர சுற்றுப்புற மாசுபாடு உள்ளது. அதனை ’ஒளி மாசுபாடு’ என்று அழைக்கின்றோம். அதிகப்படியான ஜொலிக்கும் ஒளி விளக்குகள், ஒளி உணர் சுற்று சூழல் வாழ்விடங்களையும், ஒளி உணர் உயிரினங்களையும், வெகுவாக பாதித்துள்ளதை, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஒளி மாசுபாடு என்றால் என்ன?

தேவையற்ற இடங்கலில், செயற்கை விளக்குகள் உமிழும் ஒளியே, ஒளி மாசுபாடு என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஒளி மாசுபாட்டிற்கான காரணங்கள்

ஆராய்ச்சியாளர்கள் பின்வரும் முக்கிய காரணங்களால் ஒளி மாசுபாடு உருவாகின்றது என்பதை கண்டுபிடித்துள்ளனர். 1. மோசமான அமைப்பு கொண்ட ஒளி சாதனங்களை பயன்படுத்துதல். மோசமான ஒளி சாதனங்கள், ஒளி கதிர்களை மேல்நோக்கி விரயம் செய்கின்றன. எனவே ஒளி ஆற்றல் மற்றும் பணம் வீணாகின்றது. 2. அதிகப்படியாக ஒளிரும் செயற்கை விளக்குகள்.

ஒளி மாசுபாட்டின் விளைவுகள்

ஒளி மாசுபாடு மனிதர்களையும், வன உயிரினங்களையும் கடுமையாக பாதிக்கின்றது. குறிப்பாக, இரவு நேர பாலூட்டிகளான வவ்வாள், கடல் ஆமை போன்ற ஊர்வன இனங்கலும், மற்றும் இரவு நேர நீர்நில வாழ்விகலும், ஒளி மாசுபாட்டினால் மோசமாக பாதிக்கப்படுகின்றன. ஒளி மாசுபாட்டின் காரணமாக, இந்த இனங்களின், இனப்பெருக்கம் பெருமளவு பாதிக்கப்பட்டுல்லது, இதன் காரணமாக இந்த இனங்களின் எண்ணிக்கையும் குறீப்பிடதகுந்த அளவு சுருங்கியுள்ளது. மேலும், அதிகப்படியான ஒளியின் காரணமாக, தங்களை கொள்ள வரும் விலங்குகலுக்கு எளிதில் இறையாகும் வாய்ப்பும் உள்ளது. சில குறிப்பிட்ட உதாரணங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

பொதுவாக, பூச்சிகள் செயற்கை விளக்குகளால் ஈர்க்கப்பட்டு, இரவு முழ்வதும் ஒளி அருகே இருக்கின்றன. இதன் கராணமாக, இப்பூச்சிகளின் இனச்சேர்க்கை மற்றும் நகர்தல் தடுக்கப்படுகின்றது, எனவே, இந்த பூச்சி இனங்களின் எண்ணிக்கை வெகுவாக குறைகின்றது. அதிக ஒளி, இப்பூச்சிகளை, அவற்றை கொள்ளும் விலங்குகலுக்கு எளிதில் இரையக்கும் வாய்பையும் அளிக்கின்றது. சில உயிரினங்கள் தங்களுடைய உணவு அல்லது மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை நம்பியிருக்கின்றன. ஒளி மாசுபாடு பூச்சி இனங்களின் எண்ணிக்கையை குறைப்பதால் அவற்றை நம்பிருக்கும் அனைத்து இனங்களையும் பாதிக்கிறது.

வவ்வாள் போன்ற பறவைகள், இரவு நேரங்கலில்தான் இடம் பெயரவோ அல்லது வேட்டையாடவோ செய்கின்றன. இயற்கையாகவே இருண்ட பகுதிகளில் பிரகாசமான விளக்குகள், தங்களின் ஒளியை உமிழ்வதால், இப்பறவைகளின் இருள் சார்பு பண்பு மிகவும் பாதிக்கப்படுகிறது. பறவைகள் ஒளி மூலங்கள் மூலம் ஈர்க்கப்படுகின்றன. இதனால் பறவைகள் குழப்பப்பட்டு, ஒளி மூலங்கள் பொருத்தப்பட்டுள்ள கட்டிடங்கள் மற்றும் கோபுரங்களின் மீது மோதி உயிரிழக்கின்றன. இதைப்பேன்று, கடல் பறவைகள் கடலில் உள்ள கலங்கரை விளக்கம், மற்றும் காற்று விசையாழிகள் மீது மோதி உயிரிழக்கின்றன. செயற்கை விளக்குகளினால், பறவைகள் தொடர்ந்து அலையவும் மற்றும் அவற்றின் இயற்கையான இலக்கை அடைய முடியாமலும் போகலாம்.

பொதுவாக, பெண் கடலாமைகள் கடலிலிருந்து மிகவும் தொலைவான மற்றும் இருண்ட கடற்கரை பகுதிகலிள் கூடு கட்டவும் அதன் முட்டைகளை பாதுகாக்கவும் செய்கின்றன. ஆனால், கடலோர விளக்குகள் உமிழும் ஒளியினால், இக்கடலாமைகள் தங்களது முட்டைகளை வைக்க இடம் தெரியாமல் குழம்புகின்றன. மேலும், இவைகள் கடலிலிருந்து இருந்து வெகு தொலைவிற்குச் சென்றுவிடுகின்றன. சிலசமயங்களில் இவைகள் சாலைகளிலும், குடியிருப்பு பகுதிகலிலும் தங்களது கூட்டினை கட்டி முட்டைகளை இடுகின்றன. ஒருவேலை, இவைகள் மீண்டும் கடலிற்க்கு செல்லும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், அழிந்து விடுகின்றன. ஒளி மாசு ஊர்வனவற்றிற்க்கு பசியின்மையை தூண்டுவதாகவும், இதனால், இவைகளின் எடை குறைவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

மனிதர்களையும், ஒளி மாசுபாடு கடுமையாக பாதிக்கின்றது. குறிப்பாக சீரற்ற இடைவெளியுள்ள சாலைகளின் வழியே மக்கள் செல்லும் போது செயற்கை விளக்குகளின் அதிகப்படியான ஒளியினால், சரியான வழிகாட்டலுக்கு பதிலாக குழப்பத்தை ஏற்படுத்தலாம். மேலும், மனிதர்களின் பார்வையினையும், இச்செயற்கை விளக்குகளின் அதிகப்படியான ஒளி பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூருகின்றனர்.

மேலும், அதிகப்படியான ஜொலிக்கும் ஒளி விளக்குகளினால் மின்சார ஆற்றலும் வீணாகிறது.

ஒளி மாசுபாட்டினை கட்டுப்படுதும் நடவடிக்கைகள்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களின் காரணமாக, உலகில் பல சாதனங்கள் உருவாக்கப்பட்டுள்ளது/கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கண்டுபிடிப்புகலில், மின்சார ஒளி விளக்குகள், நமது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கின்றது. எனினும், மேற்கண்டவாரு, பிரகாசமான ஒளி உயிரினங்களை பாதிக்கிறது. தற்போது, இந்த ஒளி மாசுபாட்டினை நாம் உணர்ந்துள்ளேம். ஆராய்ச்சியாளர்கள் இம்மாசுபாட்டினை கட்டுப்படுத்த ஆய்வுகளை எடுத்து வருகின்றனர். இம்மாசுபாட்டினை கட்டுப்படுத்த, சில அலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: 1. மறைக்கப்பட்ட விளக்குகளை பயன்படுத்துதல், 2. LED விளக்குகளை பயன்படுத்துதல், 3. வேலை செய்யாத பொழுது விளக்குகளை பயன்படுத்தாமை, 4. ஒளி ஆற்றல் இழப்பினை கட்டுப்படுத்த, டைமர்கள் மற்றும் சென்சார்களை பயன்படுத்துதல்.