அன்டார்டிக்கா பனிப்பாறைகள்

இராஜ்குமார்
Tue Apr 02 2013 01:15:14 GMT+0300 (EAT)


அன்டார்டிக்காவில் பனிக்கட்டி உருகி, கடல் மட்டம் உயர்ந்து, ஆழிப்பேரலைகள் வந்து பாதி உலகமே அழியும்படியான பிரமாண்ட படங்களையும், சிலிர்ப்பூட்டும் கதைகளும் கேட்டிருப்போம். ஆனால் இன்றைய அறிவியல் ஆய்வு அதற்கு நேர்மாறாக கருத்துக்களை எடுத்துரைக்கிறது.

உருகும் பனிப்பாறைகள், பனிப்பாறைகளை மேலும் அதிகப்படுத்துகின்றன எனக் கூறுகின்றனர். அதாவது கடல் மட்டம் உயரப்போவதில்லை; பாதி உலகமும் அழியப்போவதில்லை. 

உலகம் வெப்பமயமாதலால் மரம் வளர்க்க வேண்டும். வெப்பமயமாதலால் பெருங்கடல் வெப்பமடைகிறது. இந்த வெப்பத்தை, பெருங்கடல் நீரோட்டமானது அன்டார்டிக்கா பனி தேசத்திற்கு இட்டுச்செல்கிறது. வெப்பம் அன்டார்டிக்கா பனிப்பாறைகளின் கீழ்பகுதியை உருக்கி, மேற்பகுதியில் உள்ள பனிக் கட்டிகளை மிதக்கச் செய்கிறது. பனிப்பாறைகள் உருகுவதால், கடல் மட்டம் உயரும் என்று எண்ணியிருந்த அறிவியலாளர்களுக்கு, அன்டார்டிக்காவில் பனிப்பாறையின் அளவு 1985 ஆம் ஆண்டில் இருந்து ஒரு பத்தாண்டிற்கு 2 விழுக்காடாக அதிகரித்துள்ளது ஆச்சரியமளிக்கிறது.

ஏன் கடல் மட்டம் உயராமல் பனிப்பாறைகள் அதிகமாகின்றன என்று அவர் மேலும் ஆய்வு நடத்தியபோது, பனிப்பாறையில் இருந்து கரைந்த தூய நீரானது உப்பு நீரைக் காட்டிலும் மெல்லியதாகயிருப்பதால் அது குளிர்ந்து எளிதில் உரையக்கூடிய வாய்ப்புகள் கொண்டன என்பது அறிவியலாளர்களுக்கு புலனாகின. இதனால் குளிர் மட்டும், மழைக்காலத்தில் அந்நீரானது விரைவில் உரைந்துவிடுகிறது.

ஆனால் இந்நிலை அன்டார்டிக்காவில் மட்டுமே நிகழ்கிறது. ஆர்டிக் பகுதியில் பனிப்பாறைகள் தொடர்ந்து குறைந்து கொண்டே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.