நானோ தொழினுட்பம்

மு.கார்த்திகாராணி, செல்லதுறை, பெ.சா.நவராஜ்
Wed Apr 01 2015 22:49:55 GMT+0300 (EAT)
 
நானோ தொழில்நுட்பவியல் இயற்பியல் அறிஞரும் நோபல்பரிசு பெற்றவருமான “ரிச்சரிட் ஃபீன்மேன் என்பவரே (1959ல்) நானோ தொழில்நுட்பவியல் உருவாக காரணமானவர். ‘நானோ’ என்றால் கிரீக்கில் ‘மிக நுண்ணிய’ என்று பொருள்படும்.நானோ துகள்களை ஸ்கேனிங்; டனலிங் நுண்ணோக்கியின் துணையில்லாமல் வெற்றுக் கண்களால் பார்க்க இயலாது. ஏனெனில் அது 10-9 மீ அளவு மிகச்சிறிய துகள் “நானோ டெக்னாலஜி” என்ற வார்த்தையை முதலில் அறிமுகப்படுத்தியவர் “நொரியோ டானுகுச்சி”.
 
நானோ டெக்னாலஜி முறையில்இ நானோ துகள்களை அல்லது நானோ பொருட்களைக் கொண்டு நானோ நுண்ணிய அளவில் புதுமையான மற்றும் பயனள்ள வகையில் பொருட்கள்இ இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை உருவாக்குகின்றனர். நானோ தொழில் நுட்பவியலில் வேதியலும் இயற்பியலும் முக்கிய பங்கு வகுக்கிறது. இயற்பியலையும்ää வேதியலையும் மற்றும் உயிரியலில் நானோ தொழில் நுட்பவியல் மூலமாக இணைந்து செயல்படுத்துவதை உயிரி-நானோ தொழில்நுட்பவியல் என்கிறார்கள். நானோ தொழில் நுட்பவியலில் மூலமாக எவ்வகை கடினமான பொருட்களையும் மிக நுண்ணிய துகள்களாக மாற்ற முடியும்.இவ்வாறு மாற்றப்பட்ட நுண்ணிய துகள்களை பல்வேறு துறைகளில் பலவிதங்களில் பயன்படுத்திவருகின்றனர். தங்கம்ää வெள்ளிää தாமிரம்ää துத்தநாகம்ää காரியம்ää கார்பன்ää இரும்பு போன்ற உலோகப்பொருட்களையும் மிகநுண்ணிய துகள்களாக மாற்றுகின்றனர்.
 
இந்த துகள்களை பல்வேறு துறைகளில் பயன்படுத்துகின்றனர். இந்த உலோகத் துகள்களுடன் ஆக்ஸிஜன் நைட்ரஜன் சல்ஃபர் போன்ற வேதிப்பொருட்களையும் சேர்த்து பல்வேறு துறைகளில் பயன்படுத்துகின்றனர். நானோ தொழில்நுட்பவியல் மூலமாக பெறப்பட்ட உலோகதுகள்களையும்ää சில வேதித்துகளையும் இணைத்து வீட்டுச் சுவர்களில் அடிக்கும் வர்ணங்களிலும்ää சிலவகை கரைபடியாதää கசங்காத வகையில் தயாரிக்கப்படும் துணிகளிலும்ää துர்நாற்றம் அடிக்காத வகையில் தயாரிக்கப்படும் காலுறைகளிலும்ää மின்கடத்திகளிலும்ää கணினியிலும்ää பெண்கள் பயன்படுத்தும் அழகுசாதன பொருட்களிலும் தண்ணீரை சுத்திகரிக்கவும்ää உணவுப்பொருடகளை பதப்படுத்தவும்ää உணவுப்பொருட்களை வெண்ணிறமாக காட்டவும் மற்றும் மருத்துவதுறையில் நோய்களை கண்டறியவும்ää நோய்களை குணப்படுத்தவும் பயன்படுத்துகின்றனர். மேலும் சில ஆராய்ச்சியாளர்கள் நோய்களை உண்டாக்கும் கிருமிகள்ää கொசுக்கள் மற்றும் மனிதனுக்கு தீங்கு உண்டாக்கும் உயிர்களை அழிக்கவும் இந்த நானோ துகள்களை பயன்படுத்தி ஆராய்ச்சி செய்கின்றனர்.
 
தற்போது மிகவும் பயன்பாட்டில் இருக்கும் இந்த நானோ தொழில்நுட்பவியலுக்கு காரணம் நுண்ணிய துகள்களாக பயன்படுத்தப்படும் வேதிப்பொருட்களைவிட (நானோ) நுண்ணிய துகள்களாக மாறிய வேதிப்பொருட்களை அதிக வீரியமும் செயல்பாடுமே காரணம். இந்தியாவில் நானோ தொழில் நுட்பவியலின் செயல்பாடும் பயன்பாடும் மிகக்குறைவே உள்ளது. குறிப்பாக பள்ளிää கல்லூரி மாணவர்களுக்கும் நானோ தொழில்நுட்பவியல் பற்றிய அறிவு அவசியமான ஒன்று நானோ தொழில்நுட்பவியல் எனவே அனைவரும் அறியும் வகையில் கல்வியில் ஒரு பாடமாக வைக்கலாம்.