வெளியுலக காற்றுமண்டலம்

இராஜ்குமார்
Mon Apr 01 2013 13:32:22 GMT+0300 (EAT)
சூரியக்குடும்பத்தில் உள்ள கோள்களின் மீதுள்ள காற்றுமண்டலத்தைத் தாண்டி வெளியுலக காற்றுமண்டலத்தையும் தற்போது அறிவியலாளர்கள் படித்து வருகின்றனர். அதன் விளைவாக முதன்முதலாக வேறு விண்மீன் குடும்பங்களின் புறக்கோள் காற்றுமண்டலத்தை ஆய்வு செய்துவருகின்றனர். அந்த வேறுலக கோள்கள் மீது உமிழப்படும் ஒளியில் இருந்து புதிய தகவல்களைச் சேகரித்துள்ளனர். அந்தத் தகவல்கள் அவ்வுலக காற்றுமண்டலத்தில் எவ்வகையான வாயுக்கள் இருக்கலாம் என அறிவுறுத்துகின்றன. அவை சூரியக் குடும்பத்தின் கோள்களுடன் குறுக்கிடும் காற்றுமண்டலத்தை போலல்லாமல் வேறு புதியதொரு வாயுக்கலவைகளைக் கொண்டுள்ளது என தெரிகிறது.