ஆப்பிரிக்க பாலைவனத்தில் உள்ள பயிர் வட்டங்கள் கரையானால் உருவாகியது!

இராஜ்குமார்
Mon Apr 01 2013 00:27:21 GMT+0300 (EAT)

நமிம்பு பாலைவனத்தில் (Namib Desert) உள்ள பயிர் வட்டங்கள் மணல் வாழ் கரையான்களின் கைவேலை என்று எண்ணம் உருவாகியுள்ளது. இந்த விசித்திர வளையங்கள் பல்லாண்டுப் புல்லினத்தின் காய்ந்த புள்ளிகளாகும். இவை மண்ணாக ஆங்கிலோவில் இருந்து தென்னாப்பிரிக்காவிற்கு படர்ந்ததன் ஆரம்பத்தினை கண்டு சூழல் மற்றும் தொன்ம ஊகங்களில் கவரப்படுகின்றவை. நீர் விநியோகம் மற்றும் விசித்திர வளையங்களின் வாழ்க்கைக்காக சுமார் 40 முறை ஆப்பிரிக்காவிற்கு பயணித்தப்பின் செருமனி நாட்டின் காம்பற்கு பல்கலைக்கழத்தில் உள்ள நோபெருட்டு சருசன்சு (Norbert Jürgens) இதற்கு பின்புலமாக மண்கரையான்களே உள்ளன என முடிவுரைத்தார். அந்த மண் கரையானின் உயிரியல் பெயர் சம்மோடெருமசு அலோசெரசு (Psammotermes allocerus).


அந்த பயிர் வளையங்களில் உள்ள ஆயிரக்கணக்கான
உயிரினங்களில் இந்த மண்கரையானே அனைத்து பகுதியிலும் படர்ந்து இருந்து என அவர் மார்சு 29 சயன்சு பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளார். 

இக்கரையான்கள் வேர்களையும், புல்லினங்களையும் தின்று அற்புதமான மொட்டைத் தரையை பொறித்துள்ளது. சோதனையின் பொழுது அந்த மொட்டைத் தரை பிற இடங்களைக்காட்டிலும் ஈரப்பதம் மிகுதியானதாக உள்ளது. இந்த ஈரப்பதமானது இக்கரையான்களுக்கு மட்டுமல்லாமல் பிற புல்லினங்களுக்கும், உயிரினங்களுக்கும் வசதியாக இருக்கிறது. சொல்லப்போனால், உண்மையில் இக்கரையான்கள் பிற உயிரினங்களுடன் போட்டிப்போட்டு வென்றுவருகிறது. இவ்வாறு சூழலியல் பொறியாளரான நோபெருட்டு சருசன்சு கூறினார்.

மேற்கோள்கள்

Crop circle
From Wikipedia

crop circle is a sizable pattern created by the flattening of a crop such as wheatbarleyryemaize, or rapeseed. Crop circles are also referred to as crop formations, because they are not always circular in shape. The documented cases have substantially increased from the 1970s to current times. 

பயிர் வட்டம் என்பது கோதுமை, பார்லி, கம்பு, சோளம், அல்லது ரேப் விதை போன்ற பயிர்களை பரவலாகச் செய்த மிகுதியான அமைப்பு ஆகும். அவை எப்போதும் வட்ட வடிவில் இல்லாததால், பயிர் வட்டங்களை பெரும்பாலும் பயிர் அமைப்புக்கள் என்றே குறிப்பிடப்படுவது வழக்கம்.ஆவணப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் 1970 முதல் தற்போது வரை கணிசமாக அதிகரித்துள்ளது.