மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் அழிந்த நாகரிகம்: காரணம் கண்டுபிடிப்பு

ஜெயஸ்ரீ
Sat Mar 21 2015 12:20:52 GMT+0300 (EAT)

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் நாடோடியாக வாழ்ந்து வந்த மனிதன், கி.மு 12000 ஆம் நூற்றாண்டில் தான் நிலையான ஒரு இடத்தில் வாழ்க்கையை வாழ ஆரம்பித்தான். இதைக் தான் கற்காலம் என்கிறோம்.


சிறிய அளவு நிலப்பரப்பில் மனிதனோடு மனிதன் சேர்ந்து வாழ ஆரம்பித்தது கி.பி 8000தில் இருந்து தான். கி.பி 5000தில் தணிவல்லாண்மை, வன்முறை, வட்டாரப் பூசல்கள், விரைவான படிமுறை வளர்ச்சி, பெண்களைக் கீழ்தரமாக நடத்திவது போன்ற பல்வேறு காரணங்களால் கற்காலம் முடிவுக்கு வந்தது.

அடுத்து வந்த வெண்கலக் காலத்தில் தான் மனிதன் மொழியைக் கண்டுபிடித்து உபயோகிக்க ஆரம்பித்தான். மெசப்பொட்டாமியா, ஈஜிப்ட் இல் தான் பேச்சும் எழுத்தும் முதன் முதலாக ஆரம்பமானது. ஐரோப்பாவில் கி.பி 3200 இல் இருந்து கி.பி 600 வரை வெண்கலக் காலம் நடந்தது. இத்தனை மகத்துவம் வாய்ந்த இந்தக் காலம் வெகு விரைவிலேயே முடிவுக்கு வந்தது.

அந்தத் திடீர் கால மற்றத்திற்குக் காரணம் போரா? மரணத்தொற்று நோயா? அல்லது பிரளயமா? என்று பல ஆண்டுகளாகத் தலையைப் பிய்த்துக் கொண்டிருந்த வரலாற்று ஆராய்ச்சியாளர்களுக்கு இஸ்ரேலில் உள்ள கலிலீ கடலுக்கடியில் கிடைத்த மகரந்தத்தின் தொல்படிவங்களின் மூலம் கிடைத்த விடை - கடுமையான வறட்சி. கி.பி1250 முதல் கி.பி 1100 வரை நீண்ட வறட்சியால் தான் வெண்கலக் காலம் முடிவுக்கு வந்தது. இதை கண்டுபிடித்தது இஸ்ரேல் ஃபிங்கல்ஸ்டீனும் அவருடன் பணியாற்றுபவர்களும். இவர் டெல் அவிவ் எனும் யுனிவர்சிட்டியின் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்.

இதனை அடுத்து ஃபிங்கல்ஸ்டீன் மற்றும் அவரது சக ஊழியர்களான டாஃப்னா லங்குட் மற்றும் தாமஸ் லிட் உம் சேர்ந்து வெளியிட்டுள்ளக் கட்டுரையில் கி.பி 1250 க்கு பின்னர் மத்திய தரைகடலைச் சுற்றி அதிகமாகக் காணப்படும் கருங்காலி, தேவதாரு, ஆலிவ் மற்றும் காரப் வகை மரங்களின் எண்ணிக்கை குறைந்தும் வறண்ட நிலங்களில் மிகுதியாகக் காணப்படும் செடிகளும் மரங்களும் அதிகரித்தும் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

அதிலும் கி.பி 1185 க்கும் கி.பி 1130 க்கும் இடையில் தான் அதிகப்படியான சிதைவு ஏற்பட்டிருக்ககூடும் என்று யூகிக்கப்படுகிறது. இந்தக் கால மாற்றத்திற்குத் தட்பவெப்ப நிலையும் ஒரு முக்கிய பங்கு வகித்திருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது. “வடக்குப் பகுதியில் சரியான தட்பவெப்ப நிலை இல்லாமல் விவசாயம் அழிந்ததால் மக்கள் உணவிற்காக வேறு இடத்தை நோக்கி நகர்ந்திருக்கலாம். சிலர் கடல் வழியாகவும் வேறு சிலர் நிலம் வழியாகவும் பயணம் மேற்க்கொண்டிருக்கலாம். இதை அடுத்து கிழக்கு மத்திய தரைகடலைச் சுற்றி நடந்த வர்த்தகங்கள் பாதிப்புக்குள்ளாகி அதனால் வெண்கலக் காலம் அழிய வித்திட்டிருக்கலாம்” என்கிறார் ஃபிங்கல்ஸ்டீன்.

ஏற்கனவே கிடைத்த வரலாற்றுப் பதிவுகளான தானிய பற்றாக்குறை, சிதைந்த வணிகத் தடங்கள், சூறையாடப்பட்ட நகரங்கள் மற்றும் பொது மக்களிடம் அமைதியின்மை ஆகிய ஆதாரங்கள் இப்போது கண்டெடுக்கப்பட்ட மகரந்தத்தின் ஆய்வு அறிக்கையோடு ஒத்துப்போகிறது. வறண்ட பூமியில் சிறிது காலம் கழித்து மறுபடியும் மழை பொழிந்து விவசாயத்திற்கு கை கொடுக்க, கொந்தளிப்பான வெண்கலக் காலம் முடிவுற்று இரும்புக் காலம் ஆரம்பமானது.