எக்ஸ்-ரே வழிமுறையின் உதவியோடு பழங்கால காகிதச் சுருள்களின் புதிர்கள் வெளிவந்துள்ளது

புதிய அறிவியல் குழு
Sat Feb 14 2015 22:56:24 GMT+0300 (EAT)

கி.பி. 79ல் ஹெர்குலேனியம் நகரத்தின் அழிவின் போது இந்த பாப்பிரஸ் காகிதச் சுருள்கள் பிழைத்தது. சமீபத்திய தொழில்நுட்பத்திற்கு நன்றி, அதன் விவரங்களை வெகு விரைவிலேயே ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டு வந்து விடுவார்கள்.


கி.பி. 79ல் வெசுவியஸ் மலை வெடித்தது. அதனால் பொம்பேய் மற்றும் ஹெர்குலேனியம் நகரங்கள் புதைந்தது.

கிட்டத்தட்ட 2,000 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த வெடிப்பில் எஞ்சிய சில கருகிய காகிதச் சுருள்களை ஆராய்ச்சியாளர்கள் படிக்கும் விளிம்பில் உள்ளனர்.

ஹெர்குலேனியம் நூலகத்தில் புதைந்து, 260 ஆண்டுகளுக்கு முன்பு தோண்டிஎடுக்கப்பட்ட காகிதச் சுருள்களை, திறக்க முயன்றால் சுலபமாக பாதிப்படையக்கூடிய அல்லது அழியக்கூடிய நிலையில் இருந்தது. அதனால் இடர்பாடு இல்லாமல் ஆராய்ச்சியாளர்களால் அதனை படிக்க முடியவில்லை.

ஆனால் எக்ஸ்-ரே கட்ட வேறுபாடு கதிர் வீச்சு வரைவி என்ற மென்மையான உயிரியல் திசுக்களுக்கான மருந்தில் பயன்படுத்தப்படும் 3டி தொழில்நுட்பம் மூலம், இறுக்கமாக மூடப்பட்டுள்ள அந்த காகிதச் சுருள்களில் எழுதப்பட்டுள்ள விவரங்களை, அதனை பிரிக்காமலேயே வெளிப்படுத்த போகிறார்கள். இதனை மேற்கொள்வது நேஷனல் கவுன்சில் ஆஃப் ரிசர்ச்சின் நுண் மின்னியல் மற்றும் நுண் அமைப்பிற்கான நேப்பில்ஸ் அடிப்படையிலான இன்ஸ்டிட்யூட்டை சேர்ந்த விட்டோ மொசெல்லா தலைமயிலான குழுவாகும்.

இந்த ஆராய்ச்சி பற்றி ஜர்னல் நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் விவரிக்கப்பட்டுள்ளது.

"இன்னும் திறக்கப்படாமல் இருக்கும் பல ஹெர்குலேனியம் பாப்பிரஸ்களை படிப்பதற்கு புதிய வாய்ப்புகளை திறந்துள்ளது இந்த முயற்சி. இதனால் பழங்கால கிரேக்க இலக்கியம் மற்றும் தத்துவம் பற்றிய அறிவை நாம் மேம்படுத்தலாம்." என அவர்கள் எழுதியுள்ளார்கள்.

1750 களில் கண்டுபிடிக்கப்பட்ட ஹெர்குலேனியம் நூலகம் மட்டுமே புத்தங்களுடன் கண்டுப்பிடிக்கப்பட்ட ஒரே பழமையான நூலகமாகும் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இந்த காகிதச் சுருள்கள் முக்கியமாக தத்துவ ரீதியான எழுத்துக்களை கொண்டுள்ளது.

1802ல் நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட, 600 டிகிரி பாரன்ஹீட்டில் எரிமலை வாய்வுகளால் எரியப்பட்ட நிலையில் இருந்த இரண்டு காகிதச் சுருள்களை இந்த குழு ஆய்வு செய்துள்ளது. இந்த எக்ஸ்-ரே தொழில்நுட்பம் மூலம் அதில் பல கிரேக்க எழுத்துக்களை அவர்களால் கண்டுகொள்ள முடிந்துள்ளது.

"என்னவென்று படிக்க கடினமாக இருந்தாலும் கூட, இன்னமும் பாப்பிரஸின் மேல் மை இருப்பதால், எழுத்தக்களை படிக்க முடிந்துள்ளது," என மொசெல்லா பி.பி.சி.யிடம் தெரிவித்தார்.

இந்த காகிதச் சுருள்களில் உள்ள எழுத்தக்களை முழுமையாக படிக்க இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கும். ஆனாலும் அறிஞர்கள் நம்பிக்கையுடன் உள்ளார்கள். இந்த வேளையில் ஈடுபடும் போது வரலாற்றில் எங்கள் மனம் தொலைந்து போகிறது என நியூயார்க் டைம்ஸிடம் மிஷிகன் பல்கலைகழத்தை சேர்ந்த ரிச்சர்ட் ஜான்கோ கூறினார்.

"இந்த தொழில்நுட்பம் சீர்செய்யப்பட்டால், இன்னும் பல பழமையான இலக்கியங்களை மீண்டும் கண்டுபிடிப்பதற்கான கதவுகள் திறக்கப்படும்," என அவர் கூறினார்.