கிளர்கதிர் மூலம் நீர் விலக்கி மற்றும் சுய சுத்தரிப்பு பொருட்களை உருவாக்கியுள்ளனர் விஞ்ஞானிகள்

புதிய அறிவியல் குழு
Sat Feb 14 2015 22:55:32 GMT+0300 (EAT)

சாதாரன உலோகங்களை கிளர்கதிர் மூலம் தாக்குவதால் மிக மேன்மையான நீர் விலக்கி பொருட்களை உருவாக்கும் புதிய நுட்பத்தை நியூயார்க்கில் உள்ள ராச்செஸ்டர் பல்கலைகழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எந்த ஒரு தற்காலிக பூச்சு இல்லாமலேயே, இந்த உலோகங்கள் தண்ணீரை விரட்டியாகவும் மிதமான உறிஞ்சான்களாகவும் செயல்படும். நீடித்த, குறைந்த பராமரிப்பு சூரிய சேகரிப்பாளர்களை உருவாக்குதல் போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக இவைகளை பயன்படுத்தலாம். பெரும்பாலும் நீர் விலக்கி பொருட்கள் ரசாயன பூச்சுக்கள் தான் செய்யப்படும். ஆனால் இந்த நுட்பத்தில், நுண் மற்றும் நானோவளவிடை கட்டமைப்புகளின் சிக்கலான அமைமுறைகளை உண்டாக்க கிளர்கதிர் துடிப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்த கண்டுபிடிப்புகள் ஜர்னல் ஆஃப் அப்லைட் ஃபிசிக்ஸில் வெளியிடப்பட்டுள்ளது. "கிளர்கதிர் மூலம் மூலம் பல செயல்பாடுகளை புரியும் உலோக மேற்பரப்பை உருவாக்கியது இதுவே முதல் முறையாகும். இது மிக மேன்மையான நீர் விலக்கியாக, சுய சுத்தரிப்பானாக மற்றும் அதிக உறிஞ்சும் தன்மையுடன் விளங்கும் பொருளாக உள்ளது." என இயற்பியல் துறை வல்லுநர் சுன்லெய் குவோ கூறினார். இதன் வெளிச்சம் உறிஞ்சும் தன்மை, சூரிய சக்தி கருவிகள் மற்றும் உணர்கருவிகளை உருவாக்க உதவிடும். அதே போல், இதன் நீர் விலக்கி திறன், இதனை உயிரியல் கறைபடிவித்தல் எதிர்ப்பியாக, பனிக்கட்டியிடல் எதிர்ப்பியாக மற்றும் துரு எதிர்ப்பியாக ஆக்கியுள்ளது.

உலோகங்களின் மீது கிளர்கதிர் உண்டாக்கிய அமைமுறைகளில் பூச்சுக்கள் தேய்மானம் என்ற இடர்பாடு இல்லாததால், இவ்வகையான பொருட்களை பராமரிப்பது சுலபம் என குவோ கூறியுள்ளார். இந்த மேன்மையான நீர் விலக்கி மேற்பரப்புகளின் மீது தண்ணீர் ஓடும் போது, மேற்பரப்பின் மீதுள்ள தூசியையும் அதனுடன் சேர்த்து எடுத்துக் கொண்டு விடும். அதனால் இந்த பொருட்களில் சுய சுத்தரிப்பு குணமும் உள்ளது. "இவ்வகையான பகுதிகளில், மழை நீரை சேகரிப்பது மிகவும் முக்கியமானதாகும். இதற்கு மேன்மையான நீர் விலக்கி பொருட்களை பயன்படுத்தினால், உரத்த கோணங்களை கொண்ட பெரிய புனல்களை (மேற்பரப்பில் தண்ணீர் ஒட்டிக்கொள்ளாமல் தடுக்க) பயன்படுத்துவதை தவிர்த்து, சேகரிக்கும் ஆற்றலை அதிகரிக்கும்." என குவோ கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பயன்படுத்துவதற்கு சுத்தமான மற்றும் ஆரோக்கியமான கழிவறையை உண்டாக்கவும் இது பயன்படும்."

டைட்டானியம், பிளாட்டினம் மற்றும் பிராஸ் ஆகியவற்றின் மாதிரியில், நூறு கோடியில் பத்து லட்சத்தில் ஒரு நொடி என மணிக்கணக்கில் மிக குறைந்த கிளர்கதிர் துடிப்புகளை கொண்டு தாக்கி, இந்த மேற்பரப்புகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த செயல்முறை நுண்ணலைகளை உருவாக்கியது. அதன் மீது சமதளம் இல்லாத நானோ கட்டமைப்புகளை உருவாக்கியது. இது அதன் மேற்பரப்புகளின் குணங்களை மாற்றியது.

"டெஃப்ளானை நீர் விலக்கி மேற்பரப்பாக பலரும் கருதினர். ஆனால் டெஃப்ளான் மேற்பரப்பில் இருந்து தண்ணீரை நீக்க வேண்டுமானால், அதனை 70 பாகையில் அதனை சாய்க்க வேண்டும். ஆனால் எங்களின் மேற்பரப்பு இன்னமும் திடமான நீர் விலக்கியை கொண்டுள்ளது. இதனை விட்டு தண்ணீரை நீக்க லேசாக சாயத்தாலே போதுமானது" என குவோ விவரித்தார். வணிக ரீதியாக இதனை பயன்படுத்த, இந்த செயல்முறையை மேம்படுத்தும் பணியில் ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.