நீரில் ஆழமாக மூழ்குவது டால்பின்கள் மற்றும் கடல் நாய்களின் இதயத்திற்கு நல்லதல்ல: ஆய்வு

புதிய அறிவியல் குழு
Sat Feb 14 2015 22:54:35 GMT+0300 (EAT)

புதிய ஆய்வின் படி, கடல்வாழ் பாலூட்டிகள் நீரில் ஆழமாக மூழ்கு பயன்படுத்தும் நுட்பம் அவர்களின் இதயத்திற்கு நல்லதல்ல. நீரில் ஆழமாக மூழ்கும் போது, கடல்வாழ் மற்றும் தரைவாழ் பாலூட்டிகளுக்கு இதயத்துடிப்பு குறையும். இந்நேரத்தில் அவர்கள் மூச்சை அடக்கும் போது, ஆக்சிஜெனை சேமிப்பார்கள். ஆனால் டால்பின்கள் மற்றும் கடல் நாய்கள் போன்ற சில கடல்வாழ் பாலூட்டிகள் உணவை தேடி மிகவும் ஆழமாக மூழ்கும். 


ஒரே மூச்சில் தங்கள் இரையை கண்டுபிடித்து, பின் தொடர்ந்து, கொல்ல வேண்டும். மேலும் அளவுக்கு அதிகமான நீர்நிலை அழுத்தத்தில் இவையனைத்தையும் செய்ய வேண்டும். உடல் ரீதியான இந்த உழைப்பு, இயற்கையை மீறிய இதயத் துடிப்பை (தச்சிகார்டியா) உண்டாக்கும். அதனால் இவ்வகையான தீவிர இதயகுழலிய ஏற்றத்தாழ்வை எப்படி கடல்வாழ் பாலூட்டிகள் சமாளித்தது என்பது புரியாமல் இருந்தது.

இந்த ஆய்வின் தலைமை எழுத்தாளரான டாக்டர். டெர்ரி வில்லியம்ஸ், பாட்டில்நோஸ் டால்பின்கள் மற்றும் வெல்டெல் கடல் நாய்களின் ஆழமாக மூழ்கும் குணங்களை ஆய்வு செய்தார். குறிப்பிட்ட கருவியை விலங்குகளின் மீது அணிவித்து, 165 விதவிதமான ஆழமான மூழ்குதலில் ஈடுபட்டு, இதய துடிப்பையும் ஆழத்தையும் அவரின் குழு அளவிட்டது. 73% ஆழமான மூழ்குதலில், அந்த விலங்கிற்கு இதய குருதி ஊட்டக்குறை (கார்டியாக் அர்ரித்மியா), அதாவது சீரற்ற இதயத் துடிப்பு ஏற்பட்டது தெரிய வந்தது.

மெதுவான இதயத்துடிப்பு மற்றும் வேகமான இதயத்துடிப்பு என மாறி மாறி ஏற்படுவதால் ஒழுங்கற்ற இதய நிலை உருவாகிறது என இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் பரிந்துரைக்கிறது. குறைந்த இதயத் துடிப்பும் ( ப்ராடிகார்டியா) இயற்கை மீறிய இதயத் துடிப்பும் (தச்சிகார்டியா) ஒன்றுக்கொன்று எதிராக செயல்படலாம். கடல்வாழ் பாலூட்டிகளின் இதயத்தில், இதய குருதி ஊட்டக்குறையின் தாக்கம் நிலையற்றதாக இருக்கும். இருப்பினும் கூடுதல் ஆராய்ச்சிகளுக்கு தன்னுடைய இந்த ஆராய்ச்சி ஊக்கமூட்டும் என வில்லியம்ஸ் எதிர்ப்பார்க்கிறார். இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேஷன்ஸில் வெளிவந்துள்ளது.

"நம்மிடம் உள்ள மரபுவழி வந்த ஒரு வகையான மூட்டை இந்த பாலூட்டிகளிடமும் உள்ளது என்பதை இந்த ஆய்வு மக்களுக்கு அறிமுகப்படுத்தும். கடல்வாழ் பாலூட்டிகளுக்கு பாதுகாப்பானதாக கருதப்பட்ட ஆழமான மூழ்குதல், நாம் நினைத்ததை போல் இல்லை", என யூ.சி. சாந்தா க்ரஸின் சூழலியல் மற்றும் பரிணாம உயிரியல் பேராசிரியரான வில்லியம்ஸ் கூறியுள்ளார்.