டோங்கா எரிமலை புதிய தீவை உருவாக்கியிருந்தாலும் அது சீக்கிரத்தில் மறையும்

புதிய அறிவியல் குழு
Fri Feb 06 2015 16:49:10 GMT+0300 (EAT)

டோங்காவில் ஏற்பட்டுள்ள எரிமலை வெடிப்பு ஒரு புதிய தீவை உருவாக்கியுள்ளது. ஆனாலும் அது சீக்கிரத்திலேயே மாயமாகலாம் என கடந்த புதன்கிழமையன்று ஒரு விஞ்ஞானி தெரிவித்தார். டோங்காவின் தலைநகரமான நுகூ'ஆலோஃபாவின் வடமேற்கில், 65 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெருங்கடலில் ஒரு மாதகாலமாக எரிமலை வெடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. கடந்த வாரம் பசிபிக் தீவுக் குழுவிற்கு செல்ல வேண்டியசர்வதேச விமான பயணம், இதனால் பல நாட்களுக்கு பாதிக்கப்பட்டது. 


இதனை பார்வையிட, கடந்த சனிக்கிழமையன்று, நியூசிலாந்து எரிமலை ஆய்வாளரான நிக்கோ ஃபோர்னியர், இந்த புதிய தீவிற்கு அருகில் (1 மைல் தூரம் வரை) படகில் சென்றார். இந்த தீவு தளர்ந்த எரிமலைச் சொரிகற்களால் உருவாக்கியுள்ளது என்பதையும், 1.8 கிலோமீட்டருக்கு X 1.5 கிலோமீட்டர் அளவில், கடல் மட்டத்திலிருந்து 100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது என்பதையும் அவர் தெரிவித்தார்.

---------முழுக்கட்டுரையையும் படிக்க புதிய அறிவியல் இதழ் பிப்ரவரி 2015யை வாங்கிப்படியுங்கள்----------