மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முப்பரிமாண தலையணியை செவ்வாய் கோளில் பயன்படுத்துவோம் : நாசா

இராச்குமார்
Thu Jan 22 2015 23:37:20 GMT+0300 (EAT)

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ‘காலோலென்சு’ (HoloLens) எனப்படும் முப்பரிமாண ஒளியைக் காட்டக்கூடிய குவியம் பொருத்தப்பட்ட தலையணியை நாசா செவ்வாய் கோளில் பயன்படுத்தப்போவதாக கூறியுள்ளது. 


இந்த ஒளித் தலையணியைக் (holographic headset) கொண்டு நாசா ஆய்வகம் தனது ஆய்வாளர்களை செவ்வாய் கோளில் தோற்றுருவமாக (virtually) செயலாக்கம் செய்யப்போவதாக தகவல் தெரிவித்துள்ளது. 

கியூரியாசிட்டு உலவியின் (Curiosity rover) உதவியுடன் இந்த ஒளித் தலையணி ஆன்சைட்டு (OnSight) எனப்படும் மென்பொருளை கொண்டு ஆய்வாளார்கள் தங்களின் சோதனைகளை திட்டமிடவிருக்கிறது. 

ஆன்சைட்டு மென்பொருளை இவ்விரு நிறுவனமும் இணைந்து உருவாக்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.