மூன்று அரும் பூமிகள் அருகில் உள்ள சிவப்பு குறுளை விண்மீனை சுற்றிவருகிறது

இராச்குமார்
Sat Jan 17 2015 23:57:09 GMT+0300 (EAT)

ஒரு உலகளாவிய வானியலாளர்கள் குழு நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தி EPIC 201367065 என்ற சிவப்பு குறுளை விண்மீனைச் சுற்றுவரும் மூன்று அரும் பூமிகளைக் கண்டறிந்துள்ளனர். EPIC 201367065 என்பது சூரியனின் பாதி உருவமும், நிறையும் கொண்டமைந்துள்ள ஒரு சிவப்பு M-குறுளை ஆகும். இது சுமார் 147 ஒளியாண்டுகள் தொலைவில் காணப்படுகிறது. இந்த விண்மீன் தன்னைச் சுற்றும் கோள்களை கொண்ட முதல் 10 நெருங்கிய விண்களில் ஒன்றாக விளங்குகிறது. இம்மூன்று புறக்கோள்கள், பூமியை விட 2.1, 1.7 மற்றும் 1.5 மடங்கு பெரிதாக இருக்கின்றன. 

இவை வானியலாளர்கள் இதன் காற்றுமண்டலம் பூமியைப்போன்று உள்ளதா, இவை உயிர்கள் வாழ ஏற்றவையா என ஆய்வு மேற்க்கொள்ளும் வகையில் மிகவும் வெண்மையாக காணப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.