காளான்கள்

கு.செல்லதுரை மற்றும் ம.கார்த்திகா ராணி
Sat Jan 17 2015 13:25:29 GMT+0300 (EAT)

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே காளான்களின் மருத்துவ குணத்தைப் பற்றி கண்டறியப்பட்டுள்ளது. காளான் மற்ற காய் கறிகளைவிட மிகுந்த மருத்துவ குணமும் அதிக சத்து மிகுந்ததாகவும் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் குறைவான (Calories) கொழுப்பற்ற (Free fat) மற்றும் ஊட்டச்சத்து மிகுந்த வைட்டமீன்கள் அமினோ அமிலங்கள் புரதம் ஆகியவைகள் உள்ளன. காளான்களை மைக்ரோ பூஞ்சைகள் மாக்ரோ பூஞ்சைகள் என இருவகைகளாக பிரிக்கலாம். இவற்றில் மைக்ரோ பூஞ்சைகள் பொதுவாக மருத்துவ துறையிலும் மாக்ரோ பூஞ்சைகள் உணவுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. காளான் என்பது மண் மீது வளரும் ஒரு பூஞ்சை தாவர உயிரினம் ஆகும். சில நாடுகளில் மட்டுமின்றி நம்நாட்டிலும் காளான்களை செயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகின்றனர். இவற்றை ஏழையின் உணவு என்றும் அழைக்கலாம். 


இவற்றில் நன்மை தரும் காளான் மற்றும் நச்சுத்தன்மை கொண்ட காளான் என இருவகையாக பிரிக்கலாம். ஆனால் நச்சுதன்மை கொண்ட காலான்களை மிக எளிதாக கண்டறிய முடியாது எல்லா வகை காளான்களும் ஒரே வடிவமைப்பைக் கொண்டது. மேலும் ஒரு சில குறிப்புகளை வைத்து இவற்றின் நச்சுதன்மை கொண்ட காளான்களை கண்டறியலாம். இந்தியாவில் சில வகை காளான்களை வளர்த்து தொழில் செய்து வருகின்றனர். அவற்றில் குடைக்காளான் முட்டைக் காளான் (Egg Mushroom) சிப்பிக்காளான் (Oyster Mushroom) பால் காளான் (Milky Mushroom) என்பவைகள் ஆகும். பொதுவாக ஒரு ஆண்டுக்கு சுமார் 41000 டன் காளான்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வருகின்றது. 

காளான்களில் பச்சையம் இல்லாததால் ஒளிச்சேர்க்கை நடைபெறுவதில்லை. ஆனாலும் தனக்கு தேவையான உணவை சில வகையான கழிவுகளிலிருந்து பெற்றுக் கொள்கிறது. சில வகையான நச்சு காலான்களும் மரத் துண்டுகள் காய்களின் கழிவுகளிலிருந்து வாழ்கிறது. இவற்றை அழிப்பதற்கு காளான் கொல்லி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 

காளான்கள் மற்ற தாவர இனத்தை போல இலை பூ காய் போன்றவை கிடையாது. எனவே விதைத்தூள் மூலம் மட்டுமே காளான்க்ள இனப்பெருக்கம் செய்ய முடியும். அலர்ஜி (hypersensitivity) புற்றுநோய் (cancer) நோயை உண்டாக்கும் பாக்டீரியாக்களையும் மற்ற நோய் பரப்பும் கிருமிகளையும் கொள்கின்றது. இராஜகாளான் என்ற ஒரு வகையான மருத்துவகுணம் வாய்ந்தவை இவை இந்தியாவிலும் காணப்படுகிறது. இவற்றின் மருத்துவகுணங்களாவன: ஆக்ஸிஜனேற்றம் இரத்த சர்க்கரையை குறைத்தல் இரத்த கொழுப்பை குறைத்தல். ஒரு சில நுண்ணுயிரிகளின் எதிர்க்கும் திறன் கொண்டது. ஜப்பானில் இவற்றின் பயன்பாடு மிகுந்து காணப்படுகிறது. ஏனெனில் அசைவ இறைச்சியில் காணப்படும் அனைத்து வகையான சத்துக்களும் இதில் காணப்படுகிறது. எனவே இவற்றை எலும்பில்லா சைவ இறைச்சி என்றும் அழைக்கலாம். 

இந்தியாவில் மிக அதிக அளவில் காளான்களில் ஆராய்சிகள் நடைபெற்று வருகின்றன. பொதுவாக காளான்களின் வளர்ச்சி அவற்றின் தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப வளருகின்றது. காளான் வளர்ப்பு என்பது ஒரு வருமானம் ஈட்டக் கூடிய ஒரு சிறந்த தொழிலாகும். 1 கிலோ காளான் சுமார் 300 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நடுத்தர குடும்ப பெண்கள் இளைஞர்கள் இவற்றின் நோக்கத்தை அறிந்து தொழில் மேற்கொள்ள வேண்டும். பொதுவாக அதிக மக்கள் விரும்பாத காரணம் என்னவென்றால் காளான் விதை பற்றாக்குறை எனவே காளான் விதை உற்பத்தி மட்டுமே செய்தும் வருமானம் ஈட்டலாம்.