நட்சத்திர மீன்

கு.செல்லதுரை
Thu Jan 01 2015 00:37:44 GMT+0300 (EAT)

கடல் நட்சத்திரங்கள் (Asteroidea) என்ற வகுப்பு மற்றும் Echinoderms என்ற தொகுதியைச் சார்ந்தவை. இவை உலகில் சுமார் 1500 இனங்கள் உள்ளன. இவை கடல் எல்லை மண்டலங்களில் இருந்து ஆழ்கடல் வரை வாழும் திறன் கொண்டவை. கடல் நட்சத்திரம் நீலம் சாம்பல் பழுப்பு சிவப்பு மற்றும் பல்வேறு வண்ணங்களில் காணப்படுகிறது.


பொதுவாக நட்சத்திர மீன் ஒரு மத்திய வட்ட வடிவ தகடு அதைச்சுற்றி ஐந்து கரங்கள் கொண்டுள்ளது. ஆனால் ஒரு சில மீன்கள் மூன்று நான்கு அல்லது பன்னிரெண்டு கரங்கள் கொண்டும் காணப்படும் ஏனெனில் வளர்ச்சிதை மாற்றம் காயம் மரபனு குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களினால் இக்குறைபாடு காணப்படுகிறது. இழந்த கரங்கள் மீண்டும் முளைப்பதற்கு சில மாதங்களில் இருந்து பல வருடங்கள் வரை நீடிக்கிறது.

நட்சத்திர மீன் உடல் வெளியே உணவு ஜீரணிக்கும் திறன் கொண்டவையால் தன் வாயை விட மிகப்பெரிய இரையை வேட்டையாடும் நிலை தன்மை கொண்டவை. இதன் உணவு பெரும்பாலும் மட்டியுடன் சிப்பிகள் கணுக்காலிகள் சிறிய வகை மீன்கள் மற்றும் கத்திரிப் பொட்டு மெல்லுடலிகள் உண்டும் ஒரு சில இனங்கள் கடல் பாசிகள் மற்றும்  கரிம கழிவுகளை உண்டும் வாழ்கின்றன. இவ்வகை தாவரம் உண்ணும் உயிரினங்கள் மட்டுமே அதிக வருடங்கள் வாழும் திறன் கொண்டவை. இவ் நட்சத்திர மீன்கள் தொடு உணர்வு உறுப்பு திறன் இல்லை. இதனால் ஒளி வெப்பநிலை சுற்றிய நீர்நிலைகளில் உள்ள எதிரிகளை எளிதில் கண்டறிய முடிவதில்லை.

கரங்களின் முனைகளில் கண் புள்ளிகள் (Eye Spots) உள்ளன. ஒவ்வொரு முனைகளிலும் 80-200 Oceli உள்ளது. இவை ஒளியில் இருந்து ஓரளவிற்கு பாதுகாத்துக் கொள்ள உதவுகிறது. இவற்றின் இதயம் ஆறு முறை ஒரு நிமிடத்திற்கு துடிக்கின்றது.
இக்கடல் நட்சத்திர மீன்கள் மிகுந்த மருத்துவக்குணம் வாய்ந்தவை இவற்றில் Secondary Metabolites உள்ளதால் இவை உடலில் தேவையான கொழுப்பை (Essential Fatty acid) அதிகரிக்க செய்யும் திறன் கொண்டது. மேலும் ஒருசில பாக்டீரியாக்கள் மற்றும் பூஞ்சைகள் எதிர்ப்பு திறன் கொண்டது. நட்சத்திர மீன் ஆண் மற்றும் பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் கொண்டது. ஆனால் இவ்வுறுப்புகள் வெளிப்புறமாக பார்க்க முடியாது. இனச்சேர்க்கை நடைபெறும் போது இவற்றைத் தெளிவாகக் காணலாம். Astropecten polyacanthus என்ற இன நட்சத்திர மீன் மிகுந்த நச்சுத் தன்மை வாய்ந்தவை இத்தன்மையை கொண்டு எளிதில் இரையை உண்டும் மற்ற உயிரினங்களில் இருந்தும் பாதுகாத்து கொள்கின்றது.

உலக நாடுகளில் நட்சத்திர மீன்களின் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக (Regenerate Lost Body Arms) என்ற தலைப்பில் ஆராய்ச்சி நடைபெறுகிறது. ஆனால் இந்தியாவில் இவ்வகை ஆராய்ச்சிகள் ஒரு சில இடங்களில் மட்டுமே நடைபெறுகிறது. குறிப்பாக உடல் மற்றும் முட்டைகளின் வளர்ச்சி போன்ற ஆராய்ச்சி மட்டுமே நடைபெறுகிறது.

இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மன்னார் வளைகுடா (Gulf of Mannar) கடலோர மாவட்ட பகுதிகளில் இவ்வகை நட்சத்திர மீன்களைப்பிடித்து காயவைத்து மேல் நாட்டிற்கு ஏற்றமதி செய்து வருமானம் ஈட்டி வருகின்றன. இவை பெரும்பாலும் அலங்காரத்திற்காக ஏற்றுமதி நடைபெறுகிறது. ஆராய்ச்சியாளர்கள் நட்சத்திர மீன்களின் மருத்துவ குணத்தை கண்டறிந்து அலங்காரப் பொருளாகப் பயன்படுத்தி இதன் இனத்தை அழிப்பதை விட மருத்து குணத்திற்காக பயன்படுத்தினால் மனித வாழ்க்கைக்கு பயன் உள்ளதாக அமையும். மேலும் இவற்றில் குறைவாக காணப்படும் (Endemic Species) இனத்தை கண்டறிந்து இதன் இனத்தை கடல் குதிரைää கடல் அட்டை போன்று பாதுகாப்புச் சட்டம் இயற்றி இவ்வகையான நட்சத்திர இனத்தைப் பாதுகாப்போம்!