மன்னர் மூன்றாம் ரிச்சர்ட்—விவகாரம் 529 வருடங்களுக்கு பிறகு முடிவுக்கு வந்தது

புதிய அறிவியல் குழு
Sun Dec 14 2014 14:25:02 GMT+0300 (EAT)

டிஎன்ஏ மற்றும் வம்சாவளி ஆய்வு மிஞ்சியுள்ள உடல் பாகங்களின் அடையாளத்தை உறுதி செய்தது

லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டூரி கிங் தலைமையிலான ஒரு சர்வதேச ஆராய்ச்சிக் குழு லெஸ்டரில் ஒரு கார் நிறுத்துமிடத்திற்கு அடியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு உண்மையாகவே மன்னர் மூன்றாம் ரிச்சர்டுடையது என்பதை குறிப்பிடும் பெரும் ஆதாரத்தை வழங்கியுள்ளது. எனவே பழைய தடயவியல் விவகாரம் இன்றைய தேதி வரை கண்டறிந்தவைகள் மூலம் முடிவுக்கு கொண்டு வரப்படுகின்றது.

ஆராய்ச்சியாளர்களின் குழு, ஆங்கில உள்ளூர் வரலாற்றுப் பேராசிரியரும், லெஸ்டர் பல்கலைக்கழத்தில் ஆராய்ச்சிக்கான துணை வேந்தர் பிரதிநிதியுமான மற்றும் இத்திட்டத்தின் வம்சாசாவளி ஆராய்ச்சிக்கு தலைமை வகித்தவருமான கெவின் ஷூரெர் அவர்கள், இன்று ஆன்லைனில் நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எனும் உற்றுநோக்கு-மறுபார்வை இதழில் தங்களின் ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளார்.

ஆராய்ச்சியாளர்கள் உயிருடன் இருக்கும் மூன்றாம் ரிச்சர்டின் உறவினர்களிடமிருந்து டிஎன்ஏக்களை சேகரித்து, தாய் வழியாக பரம்பரைக்கு கடத்தப்படும் முழுமையான மைட்டோகாண்ட்ரியல் ஜீனோம்கள் மற்றும் தந்தை வழியாக பரம்பரைக்கு கடத்தப்படும் Y குரோமோசோம் அடையாளம் காட்டிகள் உள்ளிட்ட பல மரபியல் அடையாளம் காட்டிகளை மிஞ்சியுள்ள எலும்புக்கூடு பாகங்கள் மற்றும் உயிருடன் உள்ள உறவினர்கள் ஆகிய இரண்டு பிரிவுகளிலும் ஆராய்ந்தனர்.

Y குரோமோசோம் அடையாளம் காட்டிகள் வேறுபட்டாலும், மைட்டோகாண்ட்ரியல் ஜீனோம் எலும்புக்கூடு மற்றும் தாய்வழி உறவினர்களுக்கு இடையே ஒரு மரபியல் பொருத்தத்தை காண்பித்தது. முந்தைய முடிவு ஆச்சரியப்படுத்தவில்லை, ஏனெனில் பல தலைமுறைகளுக்குப் பிறகு ஒரு தவறான தந்தைவழி மரபு நிகழ்விற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருக்கும். இந்த ஆராய்ச்சித் தாள், லெஸ்டரில் கிரேஃப்ரையர்ஸ் பகுதியில் கண்டறியப்பட்ட எலும்புக்கூடு 1 உண்மையாகவே மன்னர் மூன்றாம் ரிச்சர்டின் உடல் பாகம் என்ற நியாயமான சந்தேகத்திற்கு அப்பால், அதை நிரூபிப்பதற்கான எல்லா ஆதாரங்களையும் இணைக்கும் ஒரு புள்ளியியல்ரீதியான ஆய்வையும் செய்யும் முதல் ஆராய்ச்சித் தாள் ஆகும்.

ஆராய்ச்சியாளர்கள் மூன்றாம் ரிச்சர்டின் முடி மற்றும் கண் நிறத்தை வரையறுக்கவும் மரபியல் அடையாளம் காட்டிகளை பயன்படுத்தினார்கள். அதன் முலம் மூன்றாம் ரிச்சர்டுக்கு அநேகமாக பொன்னிற தலைமுடி இருந்திருக்கும் எனவும் ஏறக்குறைய நிச்சயமாக நீல நிற கண்கள் இருந்திருக்கும் எனவும் கண்டறிந்துள்ளனர் லண்டனில் உள்ள பழம்பொருள் ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் மிஞ்சியிருக்கும் அவரின் தோற்றத்தை சித்தரிக்கும் முந்தைய ஓவியங்களில் ஒன்றில் இருப்பதைப் போலவே அவரின் தோற்றம் இருக்கும் எனவும் கண்டறிந்துள்ளனர்.

ஆராய்ச்சிக் குழு இப்போது போரில் மரணமடைந்த இறுதி ஆங்கில மன்னரைப் பற்றி அறிந்துகொள்ள மூன்றாம் ரிச்சர்டின் முழுமையான ஜீனோமை தொடர் நிகழ்வு வெளிப்படுத்தலுக்கு உள்ளாக்க திட்டமிட்டுள்ளது.

லெஸ்டர் பல்கலைக்கழகம் இந்த ஆராய்ச்சிக்கான முதன்மை நிதியளிப்பாளர் ஆகும். டாக்டர் கிங்கின் வெளியீட்டிற்கு, வெல்கம் அறக்கட்டளை மற்றும் லீவர்ஹியூம் அறக்கட்டளை ஆகியோரால் துணை நிதியளிக்கப்பட்டுள்ளது.

டாக்டர் கிங் கூறியதாவது: "எங்கள் ஆராய்ச்சித் தாள்கள் லெஸ்டரில் கிரேஃப்ரையர்ஸ் பகுதியில் கிடைத்த எலும்புக்கூடு 1-ன் பாகங்களை அடையாளம் காணுதல் உள்ளிட்ட அனைத்து மரபியல் மற்றும் வம்சாவளி ஆய்வுகளை உள்ளடக்குகின்றது. மேலும் இது அந்த உடல் பாகங்களின் அடையாளம் பற்றிய ஒரு முடிவுக்கு வருவதற்கான எல்லா ஆதார இழைகளையும் ஒன்றாக இணைக்கும் முதல் ஆராய்ச்சித் தாளாகும். எங்களின் உயர்தர பாரம்பரிய ஆய்வின் மூலம், அந்த உடல் பாகங்கள் உண்மையாகவே மன்னர் மூன்றாம் ரிச்சர்டுடையது என்பதை ஆதாரம் வலுவாக நிரூபிக்கின்றது, இதனால் 500 வருடங்களாக காணாமல் போனவரின் விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வருகிறோம்."

பேராசிரியர் ஷூரெர் கூறியதாவது: "ஆதாரங்களின் இணைப்பு மிஞ்சிய உடல் பாகங்கள் மூன்றாம் ரிச்சர்டுடையது என்பதை உறுதிப்படுத்தியது. குறிப்பாக அவற்றில் முக்கியாமனது தாய்வழி சந்ததியினரின் முக்கோணமுறை ஆய்வு ஆகும். Y குரோமோசோம் வழியில் உள்ள பிளவு, தந்தைவழி இல்லாமை நிகழ்வை தந்தது மிகவும் ஆச்சரியப்படுத்தவில்லை, ஆனால் ஒரு ஆராய்ச்சி முடிவாக வெற்றியின் மீதான சுவாரசியமான ஊகிக்கும்படியான கேள்விகளை முன்வைக்கின்றது. "

வெல்கம் அறக்கட்டளையின் பண்பாடு & சமூகம் ஆகியவற்றிற்கான ஆகியவற்றுக்கான இயக்குனரான சைமன் சாப்ளின், கூறியதாவது: "எந்த ஒரு தெரிந்த வரலாற்று நபர் பற்றிய மரபியல் தகவல்களை ஆய்வு செய்தல் என்பது மிகவும் கிளர்ச்சியூட்டக்கூடியதாகும், அதுவும் 500 வருடங்களுக்கும் மேலாக தொலைந்து போன ஒரு இங்கிலாந்து மன்னர் என்பதால், எங்களின் ஆராய்ச்சி மூலங்கள் வழங்கல் திட்டத்தின் மூலம் இந்த வசீகரமூட்டும் திட்டத்திற்கு ஆதரவளிக்க முடிவதில் நாங்கள் உற்சாகமடைகிறோம். மூன்றாம் ரிச்சர்ட் பற்றிய ஏற்கனவே உள்ள வளங்களுடன் இந்த தகவல்களை சேர்ப்பது, மிஞ்சியுள்ள மனித உடல் பாகங்களை ஆராயும் வழிகளை மேலும் சிறப்பித்துக் காட்டும், அதன் மூலம் கடந்த காலம் பற்றி நாம் புரிந்துகொள்ளக்கூடிய தகவல்கள் கிடைக்கலாம், மேலும் நாம் வரப்போகும் பல வருடங்களுக்கு ரிச்சர்ட் பற்றி மேலும் அறிந்துகொள்வதை நாம் எதிர்நோக்கலாம்."