சிறந்த மீளும் திறனின் மூலக்கூறுப் பாதை

புதிய அறிவியல் குழு
Wed Dec 03 2014 16:22:51 GMT+0300 (EAT)

மன அழுத்தத்திலிருந்து மீளும் திறன் ஒரு புரதம் மற்றும் அதன் பல விளைவுகளின் மூலம் உருவாகலாம்

நாம் எல்லோருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது, ஆனால் சிலர் அதை மற்றவர்களை விட நன்றாக கையாளுகிறார்கள். ஏராளமான ஆய்வுகள் எவை விலங்குகள் மற்றும் மக்களை மன அழுத்தத்தால் பாதிக்கப்படச் செய்கின்றன என்பதையும், அவை எப்படி மனச்சோர்வுக்கு வழி வகுக்கின்றன என்பதையும் ஆய்வு செய்துள்ளன. இது அவற்றை உணராத மக்களைப் பற்றி இல்லாமல், அந்த நிலைமையை கூர்ந்து ஆய்வு செய்ய வைக்கின்றது. மனச்சோர்வு மற்றும் எளிதில் உணர்ச்சிவசப்படும் தன்மை ஆகியவை மனம் உடைந்த நிலைமைகள் ஆகும். அதிலிருந்து எளிதில் மீளும் திறன் மற்றவற்றுடன் ஒப்பிடும்போது சாதாரணமானதாக தெரிகின்றது.


ஆனால் எளிதில் மீளும் திறன் என்பது எளிதில் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது அல்ல. இது மீளும் திறனில் ஒரு முக்கியப் பங்காற்றும் பீட்டா-கேட்டெனின் என அழைக்கப்படும் ஒரு புரதம் இருப்பதை உணர்த்துகின்றது. நியூயார்க் நகரத்திலிருக்கும் மவுண்ட் சினாய் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற இடத்திலுள்ள எரிக் நெஸ்லரின் ஆய்வகத்தின் ஒரு புதிய ஆய்வு, ஏன் சிலர் மட்டும் மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும், அவர்கள் எப்படி அதிகம் உணர்ச்சிவசப்படுதலிலிருந்து மீளுகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள அறிவியலாளர்களுக்கு உதவக்கூடிய நிறைய புதிய இலக்குகளை அடையாளம் கண்டுள்ளது.

“மன அழுத்த விளைவுகளை ஆய்வு செய்யும்போது, நாம் பெரும்பாலும் ஒரு விலங்குக்கு மன அழுத்தம் ஏற்படும்போது இந்த மனச்சோர்வு போன்ற நடத்தைகளை உண்டாக்கும் ஒரு செயலியக்க செயல்முறை இருப்பதாக கருதுகிறோம்,” என யுனிவர்சிடி ஆஃப் கலிஃபோர்னியா, சான் டியாகோவில் உள்ள ஒரு நரம்பியல் அறிஞரான ஆண்ட்ரே டெர்-அவகியான் கூறினார். “ஆனால் இந்த ஆய்வு மற்றும் மற்றவர்களின் ஆய்வுகள் மீளும் திறனும் ஒரு செயலியக்க செயல்பாடு என காண்பித்துள்ளன.”

நியூக்ளியஸ் அக்கும்பென்ஸ் என்பது ஊக்கமளிப்பு மற்றும் உணவு அல்லது போதை மருந்துகள் போன்ற நாம் மகிழ்ச்சியடையும் பொருட்களால் கிடைக்கும் இன்பம் ஆகியவற்றுடன் அடிக்கடி இணைந்திருக்கும் மூளையின் ஒரு பகுதி ஆகும். ஆனால் இந்தப் பகுதி மனச்சோர்வு உள்ள நபர்களிடம் மாற்றங்களையும் காட்டுகின்றது. “ஊக்கமளிப்புகளுக்கு பதிலளிப்பதில் முக்கியமான ஒரு பகுதி இங்கே உள்ளதை இது உணர்த்துகின்றது,” என நெஸ்லர் விளக்குகின்றார். “மனச்சோர்வு உள்ள நபர்களின் அறிகுறிகளில் ஒன்று, அவர்கள் வாழ்வில் உள்ள பொருட்களால் கிடைக்கும் மகிழ்ச்சியை பெற மாட்டார்கள் என்பதாகும்.”

நியூக்ளியஸ் அக்கும்பென்ஸில், மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்திற்கான மூலக்கூறு இலக்குகளை தேடும் ஆய்வுகளில், வெவ்வேறு விதமான பாதைகள் உருவாகும்படி உள்ளன. இந்த பாதைகளில் சிலவற்றை நெஸ்லரின் ஆய்வகம் கவனித்தது, இது பீட்டா-கேட்டெனின் என அழைக்கப்படும் ஒரு புரதத்திற்கு வழிவகுத்த பீட்டா-கேட்டெனின் உடல் முழுதும் காணப்படுகின்றது, இது மரபணுகள் எப்படி புரதங்களாக மாறுகின்றன என்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஆனால் மூளையில், இது இரட்டை வேலை பார்க்கின்றது, அதாவது நமது நியூரான்களின் தகவல் தொடர்புக்கு உதவும் மூளை செல்களுக்கு இடையேயான இணைப்புகளையும் ஒழுங்குபடுத்துகின்றது.

பீட்டா-கேட்டெனினின் பல பணிகள் அதை ஆய்வு செய்வதற்கான கடினமான இலக்காக ஆக்குகிறது. பீட்டா-கேட்டெனினின் அளவுகள் மூளை முழுதும் அதிகரிக்கும்போது மூளை செல் இணைப்புகளிலோ அல்லது மூளை செல் நியூக்ளியஸுக்குள் டிஎன்ஏவிலோ ஏதேனும் மாற்றங்கள் நிகழுமா என சொல்வது கடினமாகும்.

நெஸ்லரின் ஆய்வகம் எலிகளின் மரபுத்தொகுதிக்குள் மரபணுக்களை நுழைத்து, பீட்டா-கேட்டெனினின் அளவுகளை அதிகரிக்கும் ஒரு வைரஸ் உடன் வேலை செய்து வந்தது. அதிர்ஷ்டவசமாக, அந்த தொழிற்நுட்பம் செல் நியூக்ளியஸ்களுக்குள் மட்டுமே பீட்டா-கேட்டெனினை அதிகரித்தது, செல்களுக்கு இடையேயான இணைப்பில் அதிகரிக்கவில்லை. இதனால் ஆய்வகத்தால் மூளையில் பீட்டா-கேட்டெனின் டிஎன்ஏ பணிகளில் மட்டுமே தெளிவாக கவனம் செலுத்த முடிந்தது.

விஞ்ஞானிகள் வைரஸை எலியின் நியூக்ளியஸ் அக்கும்பென்ஸுக்குள் நுழைத்து, எலியை சமூக தோல்வி மன அழுத்தத்திற்கு உள்ளாக்கினார்கள். “இது மிகவும் பொருத்தமான மற்றும் பயனுள்ள மாதிரி,” என யுனிவெர்சிடி ஆஃப் பென்னிசில்வேனியா பெர்ல்மேன் ஸ்கூல் ஆஃப் மெடிசின் இன் ஃபிலடெல்பியாவில் உள்ள ஒரு நரம்பு-உயிரியல் நிபுணரான ஆலிவர் பெர்டான் கூறினார். “ஒரு ஆதிக்கம் செலுத்தும் எலி, ஆய்வுக்குள்ளாகும் விலங்கை தோல்விக்கு உள்ளாக்கி வேதனையளிக்கும் ஒரு எதிராளியாக பயன்படுத்தப்பட்டது/ எனவே விலங்குகளின் துணைப்பிரிவு ஒன்று தொடர்ச்சியாக தொல்லைக்குள்ளாக்கப்பட்டன மேலும் அவைகளிடம் மன அழுத்தத்தை ஒத்த நடவடிக்கை மாற்றங்கள் உருவாகின. இந்த மன அழுத்தம் சமூக செயல்பாடுகளால் ஏற்படும், மனித மன அழுத்தத்தின் மிகவும் பொதுவான வகையாகும்.” எலி சமூக தோல்வியால் எளிதில் பாதிக்கப்பட்டு, சமூக எதிர்செயலாளியாகிறது, மற்ற புதிய எலிகளிடம் அந்த புதிய எலிகள் எப்போதும் வலுச்சண்டைக்கு போகாதவையாக இருந்தாலும் கூட அவைகளிடம் பழகுவதை இது தவிர்க்கின்றது.

கட்டுப்பாட்டு எலி சமூக தோல்வி அறிகுறிகளை காட்டும் அதே வேளையில், நியூக்ளியஸ் அக்கும்பென்ஸில் பீட்டா-கேட்டெனின் அளவுகள் அதிகரிக்கப்பட்ட எலி, மீளும் திறனை காட்டுகின்றது. பீட்டா-கேட்டெனினை தடுத்தால், மாறாக எலி சமூக தோல்வி மன அழுத்தத்திற்கு மிகவும் எளிதில் உள்ளாகின்றன.

நெஸ்லரின் ஆய்வகம் உயிரற்ற மனித உடல் மூளைகளிலும் ஆய்வு செய்து, இறக்கும்போது மன அழுத்தம் இருந்ததை கண்டறியப்பட்ட நபர்களிடம், இறக்கும்போது மன அழுத்தம் இருந்திருக்காத நபர்களை விட நியூக்ளியஸ் அக்கும்பென்ஸில் குறைவான பீட்டா-கேட்டெனின் அளவுகள் இருந்ததை கண்டறிந்துள்ளது.

இந்த மூளைப் பகுதியில் பல செல் வகைகள் உள்ளன, ஆனால் அதிகம் ஆய்வு செய்யப்பட்டவைகளில் இரண்டு, டோபமைன் டி1 ஏற்பிகளை வெளிப்படுத்தும் செல்கள் மற்றும் டோபமைன் டி2 ஏற்பிகளை வெளிப்படுத்தும் செல்கள் ஆகியவை ஆகும். டி1 மற்றும் டி2 ஏற்பிகள் இரண்டும் வேதிச் செய்தி அனுப்பி டோபமைனுக்கான புரதங்கள் ஆகும். டோபமைன் ஏற்பிகளை இணைத்து, சமிக்ஞை மாற்றங்களை உண்டாக்குகின்றன. ஆனால் டி1 ஏற்பிகளுடனான செல்கள் மற்றும் டி2 ஏற்பிகளுடனான செல்கள் ஆகியவை மிகவும் வெவ்வேறு விதமான பணிகளை செய்கின்றன. “டி1 ஆனது சப்ஸ்டான்ஷியா நிக்ராவிற்கான நேரடி வழிப்பாதை ஆகும், ஆனால் டி2 ஆனது அதற்கான மறைமுக வழிப்பாதை ஆகும்,” என டெர்-அவகியான் விளக்கினார். “மற்ற ஆய்வகங்கள் டி1 ஆனது ஊக்கமளிப்பு நடத்தைகளில் பங்கு பெறுவதையும், டி2 வழிப்பாதை தயக்கமான மற்றும் எளிதில் மாறுகிற நடத்தைகளில் முக்கிய பங்கு வகிப்பதையும் காண்பிக்கின்றன.”

பீட்டா-கேட்டெனினின் விளைவுகள் டி2 ஏற்பிகளை கொண்டுள்ள நியூரான்கள் வரை மட்டுமே காணப்படுவதால், பீட்டா-கேட்டெனின் குறிப்பாக எளிதில் மாறுகிற நடத்தைகளுக்கு மிகவும் அவசியமானது என தெரிகின்றது. இந்த செல்களுக்குள், பீட்டா-கேட்டெனின் புரத டைசெரை நியமிக்கின்றது. டைசெர் என்பது ஆர்என்ஏவை மைக்ரோஆர்என்ஏக்கள் என அழைக்கப்படும் மெல்லிய இழைகளாக வெட்டும் ஒரு நொதி ஆகும்.

செய்தி அனுப்பும் ஆர்என்ஏக்களில் ஒட்டிக்கொண்டுள்ள இந்த மைக்ரோஆர்என்ஏக்கள் புரதங்களை உருவாக்கவும் அவற்றின் செயல்பாட்டை குறுக்கவும் தேவைப்படும் குறியீடு ஆகும். இப்படியாக, பீட்டா-கேட்டெனின் செல் உருவாக்கும் புரதங்களை மாற்றும் மூலக்கூறுகள் திரள் ஒன்றை நியமிக்கும் ஆற்றலை பெற்றிருப்பதால், இது தோல்வியை எதிர்கொள்ளும்போது ஒரு எலியை எளிதில் மாறச் செய்யும் நிகழ்விற்கு வழிவகுக்குகின்றது.

எனவே மன அழுத்தத்திலிருந்து மீளும் திறன் என்பது நியூக்ளியஸ் அக்கும்பென்ஸில் பீட்டா-கேட்டெனினை அதிகரித்தல் மற்றும், மைக்ரோஆர்என்ஏக்களின் புரதம் உருவாக்கப்படும் விதத்தின் ஒழுங்குமுறை ஆகியவை வழியாக மற்ற விளைவுகளை தொடங்கி வைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. ஆய்வு முடிவுகள் மீளும் திறனுக்கு சமிக்ஞை செய்வதில் ஏற்படும் மாற்றங்கள் தேவைப்படுகின்றன. இது வெறும் ஒரு மன அழுத்த விளைவு ஏற்படாமல் இருத்தல் என்பதில்லை. மாறாக, மீளும் திறனிற்கும், எளிதில் பாதிக்கப்படும் திறனைப் போல மாற்றம் தேவைப்படுகின்றது.

ஆய்வு முடிவுகள் “பல ஆராய்ச்சிகளுக்கான ஒரு தொடக்கப்புள்ளியாக மற்றவர்களால் பயன்படுத்தும்படியான சாத்தியமுள்ள வழிகளின் தொகுப்பு” ஒன்றை உருவாக்கியுள்ளது என பெர்டான் கூறினார்.

இந்த பணி விஞ்ஞானிகளுக்கு எதிர்கால ஆய்வுகளுக்காக ஏராளமான இலக்குகளை காண்பித்திருக்கலாம் — ஆனால் சிகிச்சைக்கான எவ்வித புதிய யோசனைகளையும் காண்பிக்கவில்லை. “மற்ற செல் வகைகளில் பீட்டா-கேட்டெனின் பல்வேறு செயல்பாடுகளின் காரணமாக, உடனடியாக மருத்துவச் சிகிச்சைக்கு மாறுவது கடினமாகும்,” என்று கூறிய டெர்-அவகியான், “ஆனால் இது மன அழுத்தத்தால் எளிதில் பாதிக்கப்படும் திறன் மற்றும் அதிலிருந்து எளிதில் மீளும் திறன் ஆகியவைகளுக்கான புதிய மூலக்கூறு இலக்குகளை அடையாளம் காட்டியுள்ளது” என கூறினார்.நெஸ்லர் இந்த ஆய்வில் உள்ள புதிய மூலக்கூறு விவரங்கள் மனச்சோர்விற்கான புதிய மருந்து இலக்குகளை கண்டறிய உதவக்கூடும் என நம்புகிறார். “இன்றைய ஆண்டிடிப்ரசெண்ட்களின் செயல்பாடுகள் பல தலைமுறைகளுக்கு முன்னால் உருவான மருந்துகளின் செயல்பாடுகள் போன்றதையே பெற்றுள்ளன,” என கூறிய அவர், “நமக்கு சிறந்த சிகிச்சைகளைக் கண்டறிய புதிய அணுகுமுறைகள் தேவை, மேலும் இந்த ஆய்வு நமக்கு அப்படிப்பட்ட முன்னேற்றங்களை கண்டறியும் ஒரு அடிப்படை நரம்பு-உயிரியலை அளிக்கின்றது” என்றார்.