குடல் பாதையில் காணப்படும் நுண்ணுயிர்களின் பரம்பரைத்தன்மை

புதிய அறிவியல் குழு
Thu Nov 13 2014 12:48:22 GMT+0300 (EAT)

முந்தைய ஆய்வின்படி, பெருந்திரளான மரபணு தொகுதி மாற்றம் நுண்ணுயிர்களின் மரபுசார் வடிவத்தின்மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது. ஆனால் செல் டுடே (நவம்பர் 6)-ல் வெளியிடப்பட்ட, பெருமளவில் மேற்கொள்ளப்பட்ட இரட்டையர்கள் ஆய்வு பகுப்பாய்வு தரவானது, மனித மரபுசார் வடிவத்திற்கும், குடல்/உணவுப் பாதையில் காணப்படும் நுண்ணுயிர் உயிரினத் திரள்களுக்கும் இடையேயான தொடர்பினை உறுதிப்படுத்துகிறது. 416 ஒற்றைக் கருத்தோற்றம் மற்றும் இரட்டை கருத்தோற்ற இரட்டை சோடிகளிலிருந்து மேற்கொள்ளப்பட்ட 1,000 மேற்பட்ட மல மாதிரிகளிலிருந்து, கார்னெல் பல்கலைகழகத்தினைச் சேர்ந்த ருத் லே மற்றும் அவருடன் பணிப்புரிபவர்கள் ஒன்றுச்சேர்ந்து, மனித உணவுப்பாதையில் காணப்படும், அதிக அளவில் பரம்பரையாக வர கூடிய கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) குடும்பத்தினைச் சார்ந்த ஒரு பாக்டீரியல் குழுமத்தை மட்டும் நோக்கமாகக் கொண்டு ஆய்வுச் செய்தனர். ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு முன்புதான் முதன் முதலாக விவரிக்கப்பட்ட கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) - மெலிந்த உடல் எடை அட்டவணையோடு (Lean Body Mass Index – BMI) பரம்பரையாக வரக்கூடிய நுண்ணுயிர்களின் வலைப்பின்னலில் மையமாக இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். குறைந்தப்பட்சம் இந்த பாக்டீர்யல் குடும்பத்தின் ஒரு பகுதியை அறிமுகப்படுத்தும்போது, சுண்டெலிகளில் எடை கூடுவது குறைதலுடன் தொடர்புடையதாக இருக்கின்றது என்பதை அவர்கள் தீர்மானித்தனர். 


இந்த ஆய்வில் சம்பந்தப்படாத, நியூயார்க் பல்கலைக்கழக லேன்கோன் மருத்துவ மையத்தின் இயக்குநரான மார்டின் ப்ளாசர் கூறியதாவது, “ பரம்பரையாக வரக்கூடிய நுண்ணுயிர் உயிரினத்திரள்களைப் பற்றி அவர்கள் விளக்கிக்கூறியபோது அது எனக்கு மிகவும் ஆர்வம் ஊட்டுவதாக இருந்தது” மேலும் “நான் இது தொடர்பான அடிப்படை நிலைக்குறித்து சில காலமாக ஆர்வம் காட்டி வருகிறேன், ஆகையால் இந்த ஆதாரம் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கிறது” என்றும் கூறினார்.

தி சயிண்டிஸ்ட் பத்திரிக்கைக்கு பேட்டியளிக்கும்போது, நுண்ணுயிரியல் இணை பேராசிரியர் லே கூறியதாவது, “எங்களுடைய முதன்மை நோக்கமானது, ஒருமுறை மற்றும் முழுமையாக, குடல்/உணவு பாதையில் காணப்படும் நுண்ணுயிர் உயிரின திரள்களின்மீது, மனித மரபுச் சார் பண்புகள் தாக்கத்தை ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டறிவதுதான்”. மேலும் “ஒரு சில வகைப்பாட்டியல் கூறுகள் இருக்கக்கூடும் அவை பரம்பரையாக வரக்கூடும் என்றுதான் நாங்கள் நினைக்க வேண்டியிருந்த்து ஆனால், ஒரு பட்டியலே கிடைத்திருக்கிறது, இதனால் மேலும் மேலும் ஆர்வமூட்டுகிறது” என்றும் அவர் கூறினார்.

டிவின்ஸ் யுகே மக்கள்தொகை ஆய்விலிருந்து பெறப்பட்ட மல மாதிரிகளின் குழு பகுப்பாய்விலிருந்து, அதிக அளவில் பரம்பரையாக வரக்கூடிய வகைப்பாட்டியல்களில் ஒன்றான, குறிப்பாக கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) குடும்பத்தின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது.

மனித நுண்ணுயிர் பெருந்திரள் கூட்டத்தினைச் சேர்ந்ததாக கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) 16S rRNA நிரலொழுங்கு இருப்பதாக நுண்ண்யிரியாளர்கள் முன்பே கண்டறிந்தப்போதும், 2012 இந்த குடும்பமானது பெயரிடப்படவில்லை. “ஆய்வாளர்கள் இதைக் கண்டுக்கொள்ளவில்லை, இதற்கு காரணம் இதற்கு பெயரிடப்படாமல் இருந்திருக்கலாம் … ரேடாரில் தப்பி இருக்கக்கூடிய வகையாக இருக்கலாம்” என்று லே கூறினார்.

லே மற்றும் அவருடன் பணிபுரிபவர்கள் கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) கூட்டமாக வலைப்பின்னல் தோற்றத்தில் இருக்கிறது என்று கண்டறிந்தனர். பழைய ஆய்வுகளின்படி low-BMI twins-ல் அதிகளவில் கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) காணப்படுகிறது என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் மேலும் கண்டறிந்தனர்.

வளர்சிதை மாற்றத்தின் மரபுசார் நுண்ணியிரின் கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) பாதிப்பை ஆராய்வதற்கு, நோய் கிருமி அற்ற சுண்டெலியினுள் மெலிந்த மற்றும் பருமனான மனித மல மாதிரிகளை செலுத்துவதை லே-வின் குழு அறிமுகப்படுத்தியது. மெலிந்த மல மாதிரியை பெற்ற மிருகங்களிடம் அதிகளவிலான கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) காணப்பட்டதால், அவற்றோடு ஒப்பிடப்பட்ட மிருகங்களைவிட எடைக் குறைவாக இருந்ததைக் கண்டறிந்தனர். உடல் எடையை குறைப்பதற்கு, கிறிஸ்டென்செனெலா மினுடா தலைமையிலான கிறிஸ்டென்செனெலெசியா (Christensenellaceae) குடும்பத்தின் ஒரு உறுப்பினரான நுண்ணுயிர் உயிரனத்திரள்களுடன் தொடர்புடையதாக – உடல் பருமன் கொண்ட எலிகளின் சிகிச்சை முறையானது இருந்தது. கிறிஸ்டென்செனிலா மினியூட்டா (Christensenella minuta) உடல் எடை குறைய காரணமாயிற்று.

மிகவும் ஆர்வமூட்டும் வகையில் இருந்தாலும், பிளாசரைப் பொறுத்தவரை, எலிகளின் மீதான இந்த குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் ஆரம்ப நிலையிலேயே இருக்கின்றன. பெல்ஜியத்தில் உள்ளா கேத்தோலிக் டி லவ்வெயின் பல்கலைக்கழகத்தின் வளர்சிதைமாற்றம் மற்றும் சத்துணவு ஆராய்ச்சி குழுவின் தலைவரான பேட்ரிஸ் கானி ஏற்று கொள்வதாவது, “மரபணு தொடர்புகள் மிகவும் தெளிவாக இருக்கின்றன” என்று கானி கூறினார். மேலும் “ உடல் எடையின் மீதான இத்தகைய பாக்டீரியாக்களின் விளைவு இன்னமும் தெளிவாகவில்லை” என்றும் கூறினார்.

டிவின்ஸ்யுகே மக்கள் ஆய்வினை பதிவு செய்யும்போது கானி கூறியதாவது, முன்பே கண்டறியப்படாத தொடர்புள்ளவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முடிந்துள்ளது. “ உணவுப்பாதை நுண்ணுயிர்த் தொகுதியின் மீது மரபியல் பின்னணி விளைவை ஏற்படுத்துகிறது என்று கடந்த 10 வருடங்களாக எங்களுக்குத் தெரியும்” என்று அவர் தி சயிண்டிஸ்ட் பத்திரிக்கைக்குக் கூறினார். “ இங்கு, ஆய்வு செய்ய வேண்டியவை அதிக அளவில் உள்ளன என்ற ஒரு முடிவிற்கு வந்துள்ளோம்”

குடல்/உணவுப் பாதையில் காணப்படும் நுண்ணுயிர் உயிரினத் திரள்களின் பரம்பரை பண்பிற்கு அடிப்படையான இணை மரபணுத் தொகுதிக் குறித்து லேயும் அவருடன் பணிப்புரிபவர்களும் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர். “ பரவலாக மரபணுத் தொகுதிகள் குறித்துப் பகுப்பாய்வுகளை நாங்கள் மேற்கொண்டிருந்தாலும் - குறிப்பாக மரபணுக்கள் மாறுபாடுகளை – அதாவது இதனோடு அதிக அளவில் தொடர்பு இருக்கக்கூடிய பரம்பரையாக வரக்கூடிய உயிரினத்திரள்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். – இந்த ஆய்வின் மூலம் இவை ஏன் பரம்பரையாக வருகின்றன என்பது குறித்த காரணங்கள் கிடைக்கக்கூடும் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று அவர் கூறினார். “ நுண்ணுயிர் உயிரனத்திரள் கலவை மற்றும் ஆதார மரபு வகை ஆகியவற்றிற்கு இடையேயான தொடர்புகள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதை அறிந்துக் கொள்ள இந்த மரபணுக்கள் எங்களுக்கு உதவி புரியும்”.