மலேசியாவில் பரவும் வழக்கத்துக்கு மாறான மலேரியா

புதிய அறிவியல்
Tue Nov 11 2014 21:13:42 GMT+0300 (EAT)

கானகக் குரங்குகளிடம் காணப்பட்ட மலேரியா நோய்க் கூறு தென் கிழக்காசியப் பகுதியில் வாழும் மக்களை அவ்வப்போது தொற்றிக் கொள்ளத் தொடங்கியது. அது மலேசியாவில் மலேரியாவின் முக்கியமான பாதிப்பாக மாறியது. 


போர்னியோ தீவுகளில் உள்ள சாராவாக் மற்றும் சாப் போன்ற மலேசிய மாநிலங்கள் நீண்ட வாலுடைய மற்றும் பன்றி வாலுடைய குரங்குகளால் பரப்பப்படும் பிளாஸ்மோடியம் நவ்லெசி ஒட்டுண்ணித் தொற்றுதலின் அதிகரிப்பைக் காட்டுகின்றன.

அங்குள்ள மக்களில் 70 சதவீத மலேரியாத் தாக்குதலுக்கு பிளாஸ்மோடியம் நவ்லெசி ஒட்டுண்ணி காரணமாக உள்ளது என நவம்பர் 3-ல் நடந்த அமெரிக்கன் சொசைட்டி ஆஃப் ட்ரோப்பிக்கல் மெடிசின் அண்ட் ஹைஜீன் கூட்டத்தில், சாராவாக் மலேசியப் பல்கலைக் கழகத்தின் மலேரியா ஆய்வு மைய இயக்குனர் பல்பீர் சிங் அறிக்கை தாக்கல் செய்தார்.

பிளாஸ்மோடியம் நவ்லெசி ஒட்டுண்ணியின் தொற்றுக்களின் சமீப காலத்திய அதிகரிப்பு கானக வளத்தை அழிப்பதன் கடுமையான அதிகரிப்புடன் ஒன்றிணைந்துள்ளது. சயின்ஸ் இதழின் 2013 ஆய்வுப்படி, 2000 முதல் 2012 வரை கானக இழப்பு சதவிகித்தில் உலக நாடுகளில் மலேசியா முன்னணி வகிக்கிறது. கானக நிலங்களை எண்ணெய் பனைத் தோட்டங்களாக மாற்றுவது குரங்கினங்களை அருகில் உள்ள வேறு வாழ்விடங்களுக்கு அனுப்ப வழி வகுக்கும் என சிங் கூறினார். குரங்குகளுக்கும் மனித இனங்களுக்கும் இடையே மலேரியா பரவுவதன் வழிமுறை தெளிவாக இல்லை என அவர் கூறினார்.

அதே சமயத்தில், பிளாஸ்மோடியம் நவ்லெசி தாக்கப்பட்ட 108 வனக் குரங்குகளில் 101 குரங்குகள் அவருடைய குழுவினரால் பரிசோதிக்கப்பட்டது. அந்த ஒட்டுண்ணி குரங்குகளைத் தீவிரமாகப் பாதிக்கவில்லை. ஆனால், மனித இனத்தைப் பாதித்த மலேரியா தீவிரமான பாதிப்பையும், மற்ற மலேரியா ஒட்டுண்ணிகளைக் காட்டிலும் அதிக இழப்பையும் ஏற்படுத்துவது போல உள்ளதாக சிங் கூறினார்.

பிளாஸ்மோடியம் நவ்லெசியின் தொற்று விகிதம் மலேசியாவின் முக்கிய இடங்களில் அதிகரித்து வருவதாக சிங் தெரிவித்தார். பல தென் கிழக்காசிய நாடுகளில் இங்குமங்குமாக பிளாஸ்மோடியம் நவ்லெசி பரவி வருவதை சமீபத்திய ஆய்வு காட்டுகிறது. ஒரு சிறிய நல்ல செய்தி: மலேரியாத் தடுப்பு மருந்துகளின் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்தாத மனித இனத்திற்கு பிளாஸ்மோடியம் நவ்லெசி சமீபத்திய வரவு.