விர்ஜின் கேலெக்டிக் ஸ்பேஸ்ஷிப் சிதைவில் புதிர் விமானி

புதிய அறிவியல் குழு
Fri Nov 07 2014 10:26:33 GMT+0300 (EAT)

கலிஃபோர்னியாவின், விர்ஜின் கேலெக்டிக் ஸ்பேஸ்ஷிப் சிதைவு, புதிராகவே நீடிக்கிறது. விமானச் சிதைவுக்கும், தனது மரணத்திற்கும் காரணமாக இருந்த, க்ரேஃப்டின் நகரக்கூடிய அடிப்பகுதியை பூட்டாமலும், மேலும் சிதைவுக்கான தொடர் நிகழ்வுகளை அந்த விமானி செய்தது ஏன்?

வெள்ளிக்கிழமை நடந்த சோதனை விமானச் சிதைவைக் குறித்த முதற்கட்ட விசாரணையை, தேசப் போக்குவரத்து பாதுகாப்பு ஆணையம் முடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.


சிதைவுக்குள்ளான ஸ்பேஸ்ஷிப் இரண்டு, கட்டணம் செலுத்தும் பயணிகளை வான்வெளியில் அழைத்துச்செல்லும் ஒரு ராக்கெட் பொருந்திய வாகனமாகும்.

அந்த விமானம், 50,000 அடி உயரத்தில் (15,000 மீட்டர்) வடக்கு லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து 95 மைல் (150கி.மீட்டர்) தொலைவில் மொஜாவே பாலைவனத்தில் சிதைவுக்கு உள்ளானது. மேலும், அதி உயரத்துக்கான துவக்கத்திற்கான ஸ்பேஸ் க்ராஃப்ட்டைத் தாங்கிய ஸ்பெஷல் ஜெட் ஏர்க்ராஃப்ட், விமானத்தில் இருந்து பிரிந்த நேரத்தில் சிதைந்தது.

விமானி பீட் சீபோல்ட், 43, தோள்பட்டைக் காயத்துடன் பேராசூட்டின் வழிகுதித்து உயிர் தப்பினார். துணை விமானி, மைக் ஆல்ஸ்பரி கொல்லப்பட்டார்.

ஸ்பேஸ்ஷிப் இரண்டில், ஒன்பதாவது முறையாக பறக்கும் விமானி, ஆல்ஸ்பரி க்ராஃப்ட் கீழிறங்குவதை தடுத்து மேல்செலுத்தும் அடிப்பகுதியை பூட்டாமல் விட்டதாக NTSB அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

விமானம், ஒலியைவிட 1.4 முறை அதிக வேகத்தில் பயணிக்கும் வரையிலும், அடிப்பகுதியை நிலைக்கச் செய்யும் வேகமான ஏரோடைனமிக் விசைகள் கீழ்நோக்கும் வரையும், ஆல்ஸ்பரி காத்திருந்து இதை செய்திருக்க வேண்டும். இதைகுறித்து ஸ்பேஸ்க்ராஃப்ட் இயக்கத்தில் தேர்ந்தவர்கள் ரியூட்டர்ஸுக்கு தகவல் அளித்தனர்.

காரணம் அறியப்படாத விஷயத்துக்காக, விமானம் மேக் 1 ஒலி வேகத்தில் பயணிக்கும்போது, 20 விநாடி ஸ்பேஸ் ப்ளேன் ராக்கெட் என்ஜின் இயக்கத்திற்குள், பூட்டும் இயக்கத்தை 9 விநாடிகள் நீக்கியிருக்கிறார் என வட்டாரங்கள் கூறுகின்றன.

அதன் விளைவு கொடூரமாக இருந்தது. அடிப்பாகத்தில் பூட்டு விலக்கப்பட்ட 4 விநாடிகளில், சுழன்று திரும்பி, 5 மைல் தூரத்திற்கு மொஜாவேவின் வடகிழக்கு பகுதி மற்றும் ஸ்பேஸ் போர்ட்டில் துகள்கள் சிதைந்து தெறித்தது.

பூட்டு நீக்கியபிறகு, அதை மேல் நோக்கி நகர்த்துவதற்கான இரண்டாவது ஆணை தரப்படவில்லை.

அடிப்பகுதியின் “ஃபெதரிங்” முறையானது, ஏர்க்ராஃப்ட் வடிவமைப்பாளர் பர்ட் ரூட்டன் வடிவமைத்து, உரிமம் பெற்றிருக்கிறார். வாகனத்தில் பரப்பளவு பெரிதாக இருக்குமாறும், அது வாகனத்தின் வேகத்தைக் குறைப்பதாக இருக்குமாறும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பின் காரணமாக, விமானம் பேட்மின்டன் ஷட்டில்கார்க்கைப் போலப் பறந்து பாதுகாப்பாக பூமியை அடையும்.

ஸ்பேஸ்ஷிப் இரண்டின் ஃபெதர் இயக்கமானது, இரண்டு ராக்கெட் பொருந்திய ஓட்ட்த்துடன், முந்தைய சோதனை விமானத்தில் கூடுதலாகவே பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

விபத்தைத் தூண்டிய அனைத்தையும் ஒருங்கமைக்கவும், சிதைவுக்கு காரணமான உபகரணம், முறைகள், இயக்கங்கள் மற்றும் சில காரணிகள் ஆகியவற்றைப் பரிந்துரைக்கவும் சரிசெய்யவும் ஒரு வருடமாகலாம் என NTSB எதிர்பார்ப்பதாக பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் க்ரிஸ்டோபர் ஹார்ட் கூறினார்.

முதற்கட்ட நேர்காணல்கள், சிதைவுப் பகுதியில் விமானத்தின் பாகங்களைச் சேகரித்தல் மற்றும் முதற்கட்ட சான்றிற்கான ஆய்வு ஆகிய அனைத்தையும் வார இறுதிக்குள் முடிப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

திங்கட்கிழமையன்று, நிபுணர் விசாரணைக்குழுவுடன் இணைந்து, காக்பிட் டிஸ்ப்ளே, செக்லிஸ்ட் வடிவமைப்பு, பயிற்சி மற்றும் பிற விமானி இயக்க சிக்கல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். உயிர்தப்பிய விமானி சீபோல்ட், மருத்துவ காரணங்களால் நேர்காணல் செய்யப்படவில்லை என ஹார்ட் கூறினார். NTSB-இன் முதற்கட்ட விபத்து விசாரணைக்கான அறிக்கை 10 நாட்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.