முன்னோர் லூசி 40-வது ஆண்டைக் கொண்டாடுகிறார்

புதிய அறிவியல் குழு
Fri Nov 07 2014 10:25:25 GMT+0300 (EAT)

டொனால்ட் ஜொஹான்சன் இத்தளத்தை எப்பொழுதும் இதை கவனித்துக்கொண்டிருக்கிறார்

எனக்குத் தெரிந்த எவரை விடவும் க்வார்ட்டர்களைக் பெருமளவு அறிந்துள்ளேன் எனக் கூறுகிறார்.

நாற்பது வருடங்களுக்கு முன்பு, எதியோப்பியாவின் வறண்ட பகுதியான ஹடார் என்னும் இடத்தில், க்வார்ட்டரை விட வியப்பூட்டக்கூடிய தொல் எச்ச எலும்பு கண்டெடுத்தார்.

கொலம்பஸ், ஒஹியோவில், அறிவியல் எழுத்தாளர்களுக்கான மாநாட்டில் பேசும்பொழுது, கை “மூட்டு எலும்பின் ஒரு சிறிய துகளை கண்டெடுத்ததாகக் கூறினார்”. எலும்புகளைப் பற்றிய படிப்பான ஆஸ்டியாலஜியிலிருந்தும், ஒப்பீட்டு உடற் கூற்றியலிலிருந்தும், அது ஒரு மனித முன்னோர் என அறிகிறேன். 


இரண்டு வாரத்திற்குப் பிறகு, ஜொஹான்சனும், அவரது சக பணியாளர்களும் 40 சதவிகிதம் அளவான ஒரு எலும்புக்கூட்டை உருவாக்குமளவு எலும்புகளை சேகரித்தனர். இந்த எலும்புகள், தற்போது லூசி என அழைக்கப்படும் நமது மனித முன்னோரின் எலும்புகளாகும்.

அடுத்த மாதத்தில், தொல் உயிர்ப்பொருள் அறிஞர்கள், நவம்பர் 24, 1974 அன்று ஜொஹான்சனது கைமூட்டு எலும்பு கண்டுபிடிப்பின் 40 வது ஆண்டைக் கொண்டாடுவார்கள்.

அந்த நாற்பது வருடங்களுக்கு உள்ளாக, மனித இனத்தின் கதையை மறுபடி எழுதும் பல தொல்எச்ச எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. மனிதனைப் போன்ற இனத்திலிருந்து இன்றைய நவீன மனித இனம் வரையில், அகதா க்ரிஸ்டியின் கதாபாத்திரங்களை விடவும் பல புதிரான தொடர்புகள் இன்னும் விலங்கிக்கொள்ள முடியாததாக இருக்கிறது.

இந்த கல் படிமங்கள் நம்மைப் பற்றி ஏராளமானவற்றை கூறுகின்றன. நாம் யார், எங்கிருந்து வந்தோம்,எப்படி இயற்கையுடன் பொருந்துகிறோம் என்பன போன்ற பலவற்றைக் கூறுகிறது என அரிஸோனா ஸ்டேட் பல்கலைக்கழகத்தின், இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹ்யூமன் ஆரிஜின்ஸைச் சேர்ந்த ஜொஹான்சன் கூறுகிறார். அறிவியல் எழுத்துக்களின் மேம்பாட்டுக்கான குழுவின் திறன் வாய்ந்த இயக்குநரான பென் பேட்ருஸ்கிக்கு மரியாதை செலுத்தும் விதத்தில், வருடாந்திர பேட்ருஸ்கி உரையை நிகழ்த்தும்போது, கல் படிமக் கதையை சுருக்கி கூறினார்.

அந்த நவீன கதைக்கான முன்னுரை 1856-ஐ நோக்கி பின் செல்கிறது. மூன்று வருடங்களுக்கு முன்பு, சார்லஸ் டார்வின், ஜெர்மனியின், நியான்டர் பள்ளத்தாக்கில் உள்ள கல்படிமத்தை கண்டுபிடித்ததுடன், இயற்கைத் தேர்வின்படி பரிணாம வளர்ச்சி என்பதைக் குறித்து ஆய்வுக் கட்டுரை வெளியிட்டுள்ளார். அந்த கல்படிமம், நியான்டெர்டெல் மனிதனின் முதல் சான்றுப் பொருளாகும். பன்னிரெண்டு வருடங்களுக்குப் பிறகு, ஃப்ரான்ஸில் க்ரோ-மேக்னான் மனிதனின் கல்படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

ஆனால், மனித வரலாற்றில், நியான்டெர்டெல் இனமும், க்ரோ-மேக்னான் இனமும் மிகவும் நெருங்கிய தொடர்புடையாக கண்டடையப்பட்டது. டார்வினும், அவரது முன்னோடியான தாமஸ் ஹென்ரி ஹக்ஸ்லியும், இது மேலும் கடினமாக இருக்கும் என அறிந்திருந்தார்கள்.

டார்வின், எந்த இனத்தின் பரிணாம வளர்ச்சி மரமானாலும், அது பல கிளைகளைக் கொண்டது என அறிந்திருந்தார். மேலும் அது பொய்யான துவங்கும் எனவும், சில கிளைகளின் பரிணாமம், அழிவு மற்றும் உயிர்வாழும்தன்மை என பிரதான கருத்துக்களை கொண்டிருக்கும் எனவும் நம்பினர். “ டார்வினும், ஹக்ஸ்லியும் குறிப்பிட்ட ஒன்றை கணித்தனர். அது, ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதனின் மிக பழமையான முன்னோர்களான சிம்பேன்சிகளின் பற்கள் மற்றும் தாடைகளை அடிப்படையாகக் கொண்டது. மேலும், 1924, தென் ஆப்பிரிகாவில், ரேமண்ட் டார்ட் “டவுங் பேபியை”க் ( Australopithecus africanus) கண்டுபிடித்திருத்திருந்தார். அது 2.5மில்லியன் வருடம் வயதுடையது. அது டார்வின் மற்றும் ஹக்ஸ்லியின் கணிப்புகளை மறுக்கும் விதமாக இருந்தது.

அன்றிலிருந்து, 1950 –இன் பிற்பகுதி வரை, ஆப்பிரிக்காவின் முன்னோர் பற்றிய நமது கண்ணோட்டத்தை, தென் ஆப்பிரிக்க பகுதியில் நடந்த கண்டுபிடிப்புகள் ஆண்டது என ஜொஹான்சன் கூறினார். நாம் எங்கிருந்து வந்தோம் என்னும் நம் புரிதலில், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து கிடைக்கும் சான்று எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது காணப்படுகிறது.

அதன் பிறகு, 1959-இல், மேரி லீக்கி என்பவர், செரெங்கிட்டி சமவெளியின் அருகில் உள்ள டான்ஸானியாவின் ஓல்டுவை கார்ஜின், 1.8 மில்லியன் வயதுடைய நட்க்ரேக்கர் மனிதனின் பெரிய மண்டை ஓட்டை கண்டுபிடித்தார் . (ஜிஞான் த்ரோபஸ், பேரான்ட்ரோபஸ் பாய்சி)

இந்த கண்டுபிடிப்பானது, தென் ஆப்பிரிக்காவிலிருந்து, கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு கவனத்தை திசை திருப்பியது. மனித தோற்றத்தை புரிந்துகொள்வதில் மேம்பட்ட நிலையை நோக்கி செல்வதாக ஜொஹான்சன் கூறினார்.

மனித முன்னோரான லூசி Australopithecus afarensis, 3 மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய நமது மூத்தோராகும். அவர் நிமிர்ந்து நடந்திருப்பார். குரங்கிலிருந்து மனிதனுக்கு மாறுவதில் தெளிவான சூழலில் இருந்திருக்க வேண்டும். ஆனால், மேலும் வேலைகள் நிரூபிக்கப்படும் நேரத்தில், குரங்கிலிருந்து மனிதனாவதற்கு நேரும் வளர்ச்சி நேரானது அல்ல. அது கிளைகளை கொண்டுள்ளது. இன்றைக்கும் அந்த கிளைகளின் மேப்பிங் நடந்து கொண்டிருக்கிறது.

1970-இன் போது, இந்த ஆய்வில் ஜொஹான்சன் உள்வரும்போது, தொல்எச்ச ஆய்வர்கள், 7 மனிதனுக்கு முன்னுள்ள இனங்கள் அடையாளப்படுத்தப்பட்டது. மூன்று genusAustralopithecus மற்றும் நான்கு genus Homo: erectus, neandertalensis, habilis and heidelbergensis ஆகும்.இப்போது 15 முதல் 20 வகையிலான இனங்கள் கலந்துள்ளது. ஜொஹான்சன் மறைமுகமாக மூன்று இனங்களைத் தெரிவித்தாலும், சில ஆய்வுக்கு பின் நிபுணர்களால் விரைவில் கூறப்படும். இன்னும் அதிகமான இனங்கள் இருப்பதாக சந்தேகிக்கிறேன் என்று கூறினார். இயற்கைத் தேர்வு மற்றும் பரிணாம மாற்றம் ஆகியவற்றின் கருத்துக்கு எதிர்கருத்தும் இருக்கிறது. குரங்கிலிருந்து மனிதன் மட்டுமல்ல. அழிந்துவிட்ட பல கிளைகள் இருக்கிறது.

இப்போது, மனித குடும்பத்தின் வரைபடம், 6 மில்லியன் வருடங்களுக்கு முன்பு வரை ஆய்வில் இருக்கிறது. Sahelanthropustchadensis-ஐ கணக்கில் எடுத்துக்கொண்டால், S. tchadensis இந்தக் கால குரங்குகளின் முன்னோராகவும், மனித இனத்தின் முன்கிளையாகவும் நிபுணர்கள் தெரிவிப்பதை ஜொஹான்சன் அறிந்திருக்கிறார். மற்றொரு மனித முன்னோராக கருதப்படும் Ardipithecus, மனித குடும்பத்தின் கிளைகளில் இருக்கும் வாய்ப்பு இருந்தாலும், பல விவாதங்கள் இதை எதிர்மறையாக மாற்றிவிட்டது. இது நிலையானதல்ல என கூறுகிறார் ஜொஹான்சன். எடுத்துக்காட்டாக, ஆர்டி நேராக நடந்தது. “மனித பரிணாமத்திற்கான உடல் வளர்ச்சிக்கு, ஆர்டியே மிகச்சிறந்த எடுத்துக்காட்டு என பலர் எண்ணுகின்றனர்.” என ஜொஹான்சன் கூறுகிறார். ஆயினும், அது மனித முன்னோடியா என்பது நமக்கு தெரியாது.

லூசி இனமும் நேராக நடந்த இனம்தான். குரங்கைப் போன்ற மூளையும் தாடையும் இருந்தாலும், நேராக நடந்த லூசி இனம் 40 வருடங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டபோது வியப்பூட்டக் கூடியதாகவே இருந்தது.

1970-இன் இடையில் நடந்த இந்த இன்றியமையாத கண்டுபிடிப்பு, நம்மில் பலரை, குடும்ப வரைபடத்தை இன்னுமொரு கோணத்தில் பார்க்கவைத்தது என ஜொஹான்சன் நினைவு கூர்கிறார்.

லூசி பிரிவின் கல்படிமங்கள் கிடைத்ததும், வேறு புதிய இனங்களும் அடையாளம் காணப்பட்டன. Australopithecus anamensis and Australopithecus garhi ஆகிய இவற்றிற்குள்ளும், பிற மனித முன்னோர்களுக்கும் இடையேயான ஆய்வுகளுக்கும் வழிவகுக்கிறது.

Anamensis, afarensis-இலிருந்து garhi வரை கிழக்கு ஆப்பிரிக்காவில் ஒரே மரபு தெளிவாகிறது. 4.2 மில்லியன் வருடங்களுக்கு முன்னதாகவும் இருக்கிறது. லூசியின் முன்னோர் ஆர்டிபிதிகஸ் என்னும் வாய்ப்பில் திறந்த நம்பிக்கை மனதுடன் இருக்கிறோம் என்றும் ஜொஹான்சன் கூறுகிறார்.

எத்தகைய நிகழ்விலும், குடும்ப வரைபடத்தில் ஒரு மையப் பகுதியை லூசி ஆக்கிரமிக்கிறது. மேலும் பல வடிவங்களுக்கு விதையாக இருக்கிறது. பரிணாம காலத்தில் முன்கணிக்க முடியாததாகவும் உள்ளது. Homo sapiens –அறிவார்ந்த மனிதனாக இருப்பினும் நம்மை சரியாக பார்க்கவும் கவனிக்கவும் முடிகிறதா என ஜொஹான்சன் கூறுகிறார்.

தற்போது, ஜொஹான்சனும், மற்றவர்களும், வெப்பநிலையும், உணவுப் பழக்கமும், எப்படி முடிவெடுக்கும் திறன், மொழிக்கான நெகிழ்வுத்தன்மை, பண்பாடு மற்றும் ஒருங்கிணைவு ஆகியவற்றை மனித இனம் அடைந்தது என்னும் விஷயங்களின் விவரங்களை நிரப்புகிறார்கள். ஜொஹான்சனைப் பொறுத்த வரை, எங்கிருந்து வந்தோம் என்னும் கேள்வி மட்டுமல்ல,எங்கு செல்கிறோம் என்பதும்தான்.

நமது பரிணாம வளர்ச்சி பயணத்தைப் பற்றி பேசும்போது, நமது வாழ்விலும், பூமியின் உயிரினங்களின் வாழ்விலும் எதிர்காலத்தில் ஒரு காரணியாக இருக்கும்.

நாம் கடந்த காலத்தில், சமமான இனத்துடன், சமமான திறன்களுடன் இருந்திருக்கிறோம். இயற்கைக்கு கடமைப்பட்டுள்ளதாக நம்புகிறேன். மேலும் அந்த இயற்கையே படைப்பும் ஆகும்.

இயற்கை அன்னையுடன் பிணைக்கப்பட்டிருந்தாலும், இதை நாம் வேடனைப்போல் பார்க்கக்கூடாது. நாம் யார், எதற்காக வந்தோம் என்பதில் முரண்ஏற்படுத்தி விடக்கூடும். மேலும், பூமியின் பலம்பொருந்திய, அழிக்கக்கூடிய, சிந்திக்கும் திறனுடைய மனிதர்களான Homo sapiens சிந்திக்க வேண்டிய நேரம் இது.