HPV நோய்த்தொற்றை அழிக்கவல்ல காளான் சாறு

புதிய அறிவியல் குழு
Fri Nov 07 2014 10:02:02 GMT+0300 (EAT)

நோய் தடுப்பாற்றலை அதிகரிக்கக்கூடிய மருந்தாக கடைகளில் விற்கப்படும் பரிந்துரை செய்யப்படாத மருந்து பலன் தரலாம். ஆக்டிவ் ஹெக்ஸோஸ் ஒன்றிணைந்த சேர்மம் அல்லது AHCC நோய் தடுப்பாற்றலை துரிதப்படுத்தி, கர்ப்பவாய் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய ஹ்யூமன் பேப்பில்லோமா வைரஸை செயலிழக்கச் செய்கிறது. புற்றுநோயை உண்டாக்கக்கூடிய HPV துணைவகைகளின் மூலமாக, இரண்டு தடுப்பூசி மருந்துகள் நோய்த்தொற்றை தடுக்கும்பொழுது, இத்தடுப்பூசி மருந்துகள், உடலில் பொருந்தியிருக்கும் HPV-ஐ வெளியேற்றுவதில்லை. 


HPV நோய்த்தொற்று உடைய 10 பெண்கள் அடங்கிய சிறு ஆய்வில், ஆறு மாதம் வரை தினமும் இம்மருந்தை உட்கொண்ட மூன்று பெண்கள், இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து காணப்பட்டனர். ஹவுஸ்டனில் உள்ள டெக்ஸாஸ் பல்கலைக்கழக ஹெல்த் சைன்ஸ் மையத்தின் மருந்தியல் வல்லுநர் ஜுடித் ஸ்மித், ஷிட்டேக் காளான் சாறு, AHCC-இன் கடைசி மருந்தளவை எடுத்த ஒரு மாதத்திற்குப் பிறகு, ஒரு பெண் குணமடைந்து காணப்பட்டார். வேறு இரண்டு பெண்களுக்கு வைரஸ் அளவு குணமடைந்து வருவதோடு, அவர்கள் ஆறு மாதத்திற்கு மருந்தை தொடர்ந்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த சோதனையில் முன்னதாகவே பங்கெடுத்துக் கொண்டிருக்கும் ஐந்து பெண்கள், முன்று மாதத்திற்கும் குறைவாக மாத்திரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நோய்த்தொற்று குணமாகவில்லை. அந்த மருந்திற்கு பக்க விளைவுகள் இல்லை.

HPV முழுமையாக அழிக்கப்படுவதை அறிந்துகொள்வது கடினமானது. வைரஸுக்கு எதிராக பெண்கள் உடலில் உருவாகும் நோய் தடுப்பாற்றல் புரதங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். “நோயை அழிக்கமுடியும் என்னும் நம்பிக்கையான எண்ணத்தில் உறுதியாக இருப்பதாக ஸ்மித் கூறுகிறார். மேலும், அக்டோபர் 28-இல் ஹவுஸ்டனில் நடந்த, ஒருங்கிணைக்கப்பட்ட ஆன்காலஜிக்கான கூட்டமைப்பிற்கான கூட்டத்தில் தரவை சமர்ப்பித்தார்.