புதிய கோள் ஒன்று 2300 ஒளி ஆண்டு தொலைவில் கண்டுபிடிப்பு

இராஜ்குமார்
Sun Nov 02 2014 23:53:15 GMT+0300 (EAT)

வானியலாளர்கள் பூமியில் இருந்து சுமார் 2300 ஒளி ஆண்டுகள் தொலைவில், கீலியம் மற்றும் ஐதரசன் ஆகியவற்றை காற்றுமண்டலமாக உள்ளடக்கிய, குறைந்த நிறையும், குறைந்த அடர்த்தியும் கொண்ட ஒரு புதிய மழுப்புகிற கோளைக் கண்டறிந்துள்ளனர். 


PH3c என்னும் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட அந்தக் கோள் கண்டுபிடிக்காமல் போயிருக்கும். அக்குடும்பத்தைச் சேர்ந்த பிற கோள்களின் ஈர்ப்பு இடர்பாடுகளினால் இந்தக் கோள் அதன் கதிரவனைச் சுற்றி வலம் வரும் சுற்றுவட்ட காலம் மிகவும் சீரற்றதாகும். 

'ஆச்ட்றோபிசிக்கல் சார்னல்' என்னும் ஆய்விதழில் இந்தத் தகவலை வெளியிடப்பட்டுள்ளது. அந்த ஆய்வில் இந்தப் புதுக் கோள் 10 முறை அதன் கதிரவனை சுற்றும் பொழுது 10.5 மணி நேரம் மாற்ற காண்கிறது. ஏல் மற்றும் ஆக்சுபோர்டு பல்கலை ஆகியவை இணைந்து நடத்தும் கோள் வேட்டைத் திட்டத்தின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.