நிலநீர் வாழிகளைத் தாக்கும் புதிய நுண்ணுயிர் பூஞ்சான்

இராஜ்குமார்
Sun Nov 02 2014 22:21:14 GMT+0300 (EAT)

சைற்றிடியோமைகோடாப் (chytridiomycota) பூஞ்சானால் (உயிரியல் பெயர், Batrachochytrium dendrobatidis (Bd)) தாக்கப்படும் கொல்லுகின்ற தோல் நோய் உலகைச் சுற்றி 200 தவளைகள், தேரைகள் (toats) மற்றும் பிற நிலநீர் வாழிகளை (amphibians) அச்சுறுத்தியுள்ளது. கடந்த ஆண்டு, பெரும் தொகையான தீப்பல்லிகளை (fire salamanders) அழிக்கும் ஒரு தொடர்புடையக் கிருமியை நெதர்லாந்து மற்றும் பெல்சியத்தில் கண்டறியப்பட்டது. 


முதுகெலும்புடைய நிலநீர் வாழிகளைப் பாதிக்கும் ஒரு புதிய நுண்ணுயிர் கொலையாளியான B. salamandrivorans (Bs) என்பதே இது போன்ற வகையில் காணப்படும் இரண்டாம் உயிரினமாகும். தற்போது 4 கண்டங்களைச் சேர்ந்த சுமார் 5000 நிலநீர் வாழிகளை ஆய்வு செய்த போது Bs கிருமி பிராணி வர்த்தகத்தின் மூலம் ஆசியாவிலிருந்து ஐரோப்பியத்திற்கு பரவியது என அறியப்படுகிறது. 

‘சயன்சு’ ஆய்விதழில் ஒற்றோபர் 20 அன்று வெளியிடப்பட்ட இந்த ஆய்வு அறிக்கையில் இது எந்த அளவிற்கு பூஞ்சான்களுக்குப் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது எனவும் கூறப்பட்டுள்ளது.