முனைவுற்ற துளிமமடைகள் உண்டாக்கும் ஓரியல்பான துளிம நினைவகம்

இராச்குமார்
Sun Nov 02 2014 00:23:40 GMT+0300 (EAT)

துளிம நினைவகத்தில், தரவு சேமிப்பிற்கு அடிப்படையான அலகு ‘துளிமமடை’ (qubit). துளிமமடை 0 மற்றும் 1 ஆகிய இரண்டு மேலுறு நிலையிலும் ஒரே நேரத்தில் இருப்பதால், வழமையான மடையைக் (classical bit) காட்டிலும் துளிமமடை மிக அதிக உள்ளுருமத்தைச் (தகவல்) செயலாற்ற முடியும். ஓரியல்பற்றதான (decoherence) இந்தத் துளிமமடைகள் அடிக்கடி நிலையற்றதால் (unstable) இருக்கிறது, எனவே நேரடிப் பழக்க நினைவகச் சேமிப்பகத்தை (real-life memory storage) உருவாக்குதல் நடைமுறைக்கு ஒவ்வாதது.

‘நியூ சார்னல் ஆப் பிசிக்சு’-ல் (New Journal of Physics) வெளியிடப்பட்ட ஆய்வுத்தாளில் ஆக்சுபோர்டு பல்கலையின் யூட்டிங் பிங் (Yuting Ping), லான்காச்டர் பல்கலையின் சான் கெச். செவ்ரசன் (John H. Jefferson) மற்றும் புனித ஆந்திரியாப் பல்கலையின் பிரண்டான் டபிள்யூ. லோவட் (Brendon W. Lovett) ஆகிய இயற்பியலாளர்கள், ஓரியல்பற்றதும் மற்றும் பிற கச்சிதமற்றவைகளுக்கு அமைதியாக இருக்கும் துளிம நினைவகத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த வடிவமைப்பு, துளிமமடை நிலையைச் சேமிக்கும் துளிம செயலிகளின் நெடுகச் செல்லும் “பறக்கும் துளிமமடைகள்” எனப்படும் நகரக்கூடியத் துளிமமடைகள் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இதுப்பற்றி “நிலையான கட்டுப்படுத்தியப் பறக்கும் துளிமமடைகளை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தும் பொழுது துளிமத் தகவலைச் சேமிக்க முடிகிறது. ஆனால் அவ்வாறு சேமிக்கும் ஆகையால், ஒரு வகையில் இருந்து மற்றொன்றிற்கு தகவலை மாற்றும் வழிகளைக் கண்டறிதல் முக்கியமானது” என லோவட் தெரிவித்தார்.

மேற்கோள்கள்