மனிதரைப் போன்று பறவை கருவும் குரலை பிரித்தறிகிறது

இராச்குமார்
Sat Nov 01 2014 17:13:29 GMT+0300 (EAT)

மனித சிசுக்கள் தான் கருத்தரித்தப்பின் 32 முதல் 39 வாரத்திற்குள் ஆண் குரலைப் பெண் குரலில் இருந்தும், பிற அந்நியர்களின் குரலைத் தாயின் குரலில் இருந்தும் பிரித்தறிந்து விடுகிறது. அது போன்று ஆய்வாளர்கள் பறவையின் கருவும் அவ்வாறு தனது தாயின் குரலைப் பிற பறவைகளின் குரலில் இருந்து பிரித்தறிகிறது என நிறுவியுள்ளனர். 

ஆய்வாளர்கள் அசுத்திரேலிய பாடும்பறவையான சிறிய ரென்னின் (wren), (உயிரியல் பெயர்: மாலுரசு சையனிசு (Malurus cyaneus) கருமுளையினை ஆய்வு செய்த போது, மனிதக் கருவைப் போன்றே இப்பறவைக் கருவும் அது கேட்கும் குரலினை வேறுபடுத்தி அறிகிறது எனக் கண்டறிந்துள்ளனர். 

ஆய்வாளர்கள் காட்டில் உள்ள கூட்டில் இருந்து எடுத்துவரப்பட்ட 43 ரென் பறவை முட்டைக்கும் 1-நிமிட குரல்பதிவு ஒலிப்பேழையை போட்டுக் காட்டினர். 13 முதல் 14 நாள் வரையிலான கருவளர்ச்சி நாட்களில் அந்த முட்டைகள் சுமார் 9 முதல் 13 நாட்களுக்குள் இருக்கும். இரைச்சலும், ஒரு குளிர் ரென் பறவையின் தொடர்பு கொள்ளும் அழைப்பு அல்லது ஒரு பெண் ரென் பறவையின் அடைகாக்கும் அழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய குரல்களைப் போட்டுக்காட்டப்பட்டது. 

பெண் ரென் பறவையின் அடைக்காக்கும் அழைப்பும், குளிர் ரென் பறவையின் தொடர்பு கொள்ளும் அழைப்பும் கேட்ட கருமுளைகள் தங்களின் இதயத்துடிப்பை குறைக்கின்றது. இதயத்துடிப்பைக் குறைக்கின்றதே அவை குரல்களைப் பிரித்தறிகின்றதற்கான குறிப்பாகும். 

இந்த ஆய்வு அறிக்கையை கடந்த அக். 28 அன்று பிரொசிடிங்சு ஆப் த ராயல் சொசைய்டியில் வெளியிடப்பட்டுள்ளது.