மிக வேகமான மிகைப்பியை அமெரிக்க இராணுவம் வெளியிட்டுள்ளது

இராஜ்குமார்
Sat Nov 01 2014 11:29:07 GMT+0300 (EAT)

டார்பா (DARPA) என்னும் அமெரிக்க இராணுவ ஆய்வுக்கூடம், இதுவரை அளவிடப்படாத விரைந்த திண்ம நிலை மிகைப்பி தொகுப்புச் சுற்று (solid-state amplifier integrated circuit) உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறியது. 


நார்த்துராப் குரும்மானால் (Northrop Grumman) உருவாக்கப்பட்ட இந்த 10-அடுக்கு HEMT பொது மூல மிகைப்பி (common-source amplifier) 1.0THz இல் 9dB ஈட்டமும், 1.03THz இல் 10dB ஈட்டமும் காட்டுகிறது. 6 டெசிபெல் அல்லது அதற்கு மேலான ஈட்டமே இதனைக் ஆய்வுக்கூட சோதனையில் இருந்து பொது பயன்பாட்டிற்கு எடுத்துச் செல்கிறது. டெட்றா கெர்ட்சு அலையெண்ணில் இதுவரை 9 டெசிபெல் ஈட்டம் கிடைக்கப்பெற்றதே இல்லை என டார்பாவின் செயல்பாட்டு மேலாளர் டேவ் பால்மர் (Dev Palmer) கூறினார்.