அண்டார்டிக்கா ஓசோன் ஓட்டை உறுதியாக உள்ளது : ஆய்வு

இராஜ்குமார்
Fri Oct 31 2014 20:57:52 GMT+0300 (EAT)

அண்டார்டிக்கா ஓசோன் ஓட்டை செப்டம்பர் மாதம் அதன் உச்சத்தைத் தொட்டது. கடந்த ஆண்டின் உச்சத்திற்கு நிகராக சுமார் 24.1 மில்லியன் சதுர கி.மீ ஆக நீண்டுள்ளது என ஒரு புதியு ஆய்வு வெளியிட்டுள்ளது. 

ஆகத்து முதல் ஒற்றோபர் மாதம் வரை ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓசோன் ஓட்டை உருவாகும். இது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 24 மில்லியன் சதுர கி.மீ உச்சத்தைத் தொட்டது. 


இதுவரையில் ஒரு நாளில் இந்த ஓசோன் ஓட்டை செப். 9, 2000 ஆண்டு 29.9 மில்லியன் சதுர கி.மீ என உயர்ந்ததே மிக அதிகமானதாக பதிவு செய்யப்பட்டதாகும். ஓசோன் ஓட்டையால் கதிரவனின் புற ஊதாக் கதிரலைத் தடுக்கமுடியாமல் போகும். புற ஊதாக் கதிரலைகளால் தோல் புற்றுநோய் ஏற்படும். பெருங்கடலின் முகனை உணவுச் சங்கிலியான அலைதாவரம் மற்றும் தாவரங்களும் பாதிக்கப்படும். 

ஓசோன் ஓட்டையை அளப்பதற்கு செறிவறி மிதவைக்கருவி ஊதுபைகளைப் (ozonesonde balloons) பயன்படுத்திவர். கோலோராடோவில் உள்ள புவி அமைப்பு ஆய்வுக்கூடத்தின் ‘த நேசனல் ஓசோனிக் அண்ட் அட்மாசுபியரிக் அட்மினிட்றேசன் (The National Oceanic and Atmospheric Administration (NOAA)) என்னும் அமைப்பு 1986ம் ஆண்டில் இருந்து தென் துருவத்தில் ஓராண்டுக்கு சுமார் 50-60 செறிவறி மிதவைக்கருவி ஊதுபைகளைக் கொண்டு ஓசோன் ஓட்டைகளை அளந்து வருகிறது. 

டாம்சான் (Dobson) என்னும் அலகில் இதனை அளக்கப்படுகிறது.