இசுரோவின் 2ம் செவ்வாய் சுற்றுகலன் 2018ல் ஏவப்படும்

இராஜ்குமார்
Fri Oct 31 2014 15:48:00 GMT+0300 (EAT)

உலகே பாராட்டும் வகையில் 2014ல் இசுரோ வெற்றிகண்ட செவ்வாய் சுற்றுகலன் திட்டம் மிக நேர்த்தியானதும், பொருளாதாரப் பயன் கொண்டதாகமும். அந்த வெற்றியுடன் 2018ல் இசுரோ அமைப்பு செவ்வாய் கோளைச் சுற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. இம்முறை செவ்வாய் சுற்றுகலன் திட்டம் ஒரு தரையிறங்கி மற்றும் உலவியுடன் (lander and rover) பயணிக்கவிருக்கிறது எனக் கூறப்படுகிறது. 


இசுரோவின் செய்மதி மைய இயக்குனர் எசு. சிவக்குமார் 2018ல் விண்ணில் செலுத்தத் திட்டமிட்டுள்ள செவ்வாய் திட்டத்தை உறுதிசெய்தார். தரையிறங்கி மற்றும் உலவியை செவ்வாய்க்கு செலுத்த கனமான ஏவுகணைத் (heavier rocket) தேவையென்பதால் இசுரோ அடுத்தத் தலைமுறை ஏவுகணையைத் தயாரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.