நெருப்புக்கோழியிடம் கற்றுக் கொள்ளும் எதிர்கால எந்திரன்கள்

இராஜ்குமார்
Fri Oct 31 2014 14:38:06 GMT+0300 (EAT)

கண்டுபிடிப்பாளர்கள் நெருப்புக்கோழியைப் போல ஓடுகிற பறவைகளிடம் இருந்து எந்திரன்கள் கற்றுகொள்ளும் என நிறுவியுள்ளனர். ஓரகான் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக். சோனதன் கருச்ட் (Dr. Jonathan Hurst) அவர்களின் குழுவின் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

பூமியில் விஞ்சி மேம்பட்டும் வாழ்ந்தும் தரையைச் சுற்றி விரைந்து ஓடி திரிந்தும் இருக்கும் பறவை இனங்கள் கூட எந்த இரண்டு காலுடைய நில விலங்குகளுக்கு இணையான ஓட்டப்பிடிப்பவைகள் என ஆய்வாளர்கள் அறிந்துள்ளனர். இந்த ஓடும் பண்புகள் தொன்மாக்களின் காலங்கள் தொட்டே பரிணாமம் அடைந்து வருகின்றன. மேலும் சிலர் மனிதர்கள் உள்பட தற்போது அனைந்து இருகால் ஓடுயுர்கள் மேம்பட்டுவருகிறது என்கின்றனர். 

ஓடும் பறவைகள் சிறிய காடையில் இருந்து 500 மடங்கு அதிக எடையுடைய நெருப்புக் கோழி வரை பலவகையானவை உள்ளன. பெரும்பான்மையானவை பறக்கவும் செய்யும் ஆனால் அவை நிலத்திலே மிகுதியான தனது வாழ் நாளைக் கழிக்கிறது. ஒரு புதிய ஆய்வு அவை ஆற்றலைச் சேமிக்கவும், கால்களை காயங்களாக்காமல் இருக்கவும் முன்னுரிமை அளித்து முடிவுகளை எடுக்கின்றன என கூறுகிறது. காடுகளில் காயமடைந்தால் உயிரிழக்கவும் அல்லது வேட்டையாடப்படவும் நேரிடலாம். 

தற்கால எந்திரன்கள் பெரும்பாலும் மொத்த நிலைத்தன்மை வலியுறுத்தும்படி வடிவமைக்கப்படுகிறது. இது நிலையான நடையை எடுத்து இயம்புகிறது. ஆனால் இக்கட்டுமானம் ஆற்றல் மிகுதியுடையதாக மாற்றுகிறதால் எந்திரன்களின் நகரும் தன்மையைக் குறைக்ககூடும். 

ஆய்வாளர்கள் இயல்பான நிலைத்தன்மையை சிறிது மாற்றியமைத்தால் எந்த ஆபத்துமில்லை என கூறுகின்றனர். ஏனென்றால், இதனால் எந்திரன்கள் கீழே விழவும், பிறவற்றுக்கு சேதமும் விளைவிக்காது என்கின்றனர். எந்திர கட்டுப்பாட்டில் நிலைத்தன்மையைத் தளர்த்தி மேம்பட்ட இயக்கவியலினால் முன்னுரிமையை பொறுத்து நிலைத்தன்மையையும் இயக்கத்தினையும் தரமும் புதியக் கோட்பாட்டை உருவாக்கியுள்ளனர். 

இதனால் எதிர்கால எந்திரன்கள் பறவைகளைப் போன்று விரைந்து செயல்படக்கூடிய ஆற்றலைப் பெறும் என ஆய்வாளர் தமது ஆய்வில் தெரிவித்துள்ளனர். இதுப் பற்றிய ஆய்வு சோதனை உயிரியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டுள்ளது.