அமெரிக்க ஏவுகணை விண்ணில் செலுத்திய போது வெடித்து சிதறல்

இராஜ்குமார்
Wed Oct 29 2014 20:42:09 GMT+0300 (EAT)

உலகளாவிய விண்வெளி மையத்திற்கு அனுப்புவதற்கு மனிதனற்ற வழங்கல் ஏவுகணையை அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. ஆர்பிட்டல் சயன்சஸ் கார்ப் நிறுவனம் அனுப்பிய இந்த ஆண்டாரஸ் ஏவுகணையை விண்ணில் செலுத்திய போது திடீரென அது வெடித்து சிதறியது. உலகளாவிய விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் 6 வான் ஆய்வாளர்கள் 600 கிகி உணவுகள் எடுத்து சென்ற இந்த 2200 கிகி விண்கலம் வெடித்து சிதறியதில் அனைவரும் அதிர்ந்துள்ளனர். 

ஆர்பிட்டல் சயன்சஸ் நிறுவனத்தின் பங்கு 15.6 விழுக்காடு மதிப்பு குறைந்து $25.60 ஆக குறைந்தது. இந்த ஏவுகணையில் வான் ஆய்வாளர்களின் மூளைக்கு எவ்வாறு குறுதி பாய்வு உள்ளது என்பதை அறியும் கருவியும், புவிவட்டப் பாதையில் எவ்வாறு கடலை சுடுதல்கள் நடைபெறுகின்றன மற்றும் விண்வெளி பயணத்திற்கு மூளையின் காப்பு அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதனை அளப்பதற்கும், இது தேவையான கருவிகளும் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.