மூலக்கூறு காந்தம் மீக்குளிர்விக்கப்பட்ட நிலைக்கு செல்கிறது

மா. சண்முகசுந்தரம்
Wed Oct 29 2014 19:53:01 GMT+0300 (EAT)


பிரிட்டனிலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு கெல்வினுக்கும் கீழே ஒரு மூலக்கூறு காந்தத்தினை  குளிர்ச்சியடைய முயற்சித்து  வெற்றி கண்டுள்ளனர். முதன் முறையாக இது ஒரு நானோ காந்தத்தின் உதவியுடன் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது.


இந்த கண்டுபிடிப்பு செயல்முறையில் மிக குறைந்த வெப்பநிலைகள் (எடுத்துகாட்டாக 1K) சாத்தியம் என எடுத்தியம்புகிறது. மேலும் இது புதிய மீக்குளிரூட்டிகளுக்கான சாத்தியக்கூறுகளையும் மற்றும் நானோ காந்தங்களின் குவாண்டம் இயல்புகளையும் விளக்கவல்லதாய் அமைவதால் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.


------முழுக்கட்டுரை புதிய அறிவியல் நவம்பர் 2014 மின்னிதழில் வெளிவரும்------