இயற்கை எவ்வாறு திறன்வாய்ந்த நுண்ணூயிர்க்கொல்லியை உருவாக்குகிறது? - புதிய ஆய்வு

இராஜ்குமார்
Tue Oct 28 2014 22:48:09 GMT+0300 (EAT)

இல்லினாய்சு பல்கலைக்கழகத்தைச் (University of Illinois) சேர்ந்த ஆய்வாளர்கள் இயற்கை எவ்வாறு திறன்வாய்ந்த நுண்ணூயிர்க்கொல்லியை (powerful antibiotic) உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். பத்தாண்டுகளாக மர்மமாக விளங்கிய ஒரு விடயத்தை அறிந்ததினால், ஆய்வாளர்கள் மருத்துவப் பயன்பாட்டிற்கு ஒத்த மூலக்கூறுகளை (molecules) ஆய்வு செய்யப் புதிய வழியை இது வகுத்துள்ளது.

‘நேச்சர்’ ஆய்விதழில் வெளியாகிய இந்த ஆய்விற்காக, நுண்ணுயிர்க்கொல்லும் தன்மையை முதன்மையாக கொண்டப் பல்வேறு சேர்மங்களை (compound) உள்ளடக்கும் ஒரு சேர்ம வகுப்பில் ஆய்வாளர்கள் கவனம் செலுத்தினர்.

அச்சேர்மங்களில் மிக பிரபலமானது, உணவில் காப்புப்பொருளாக (preservative) சேர்க்கவும், ஆய்வுக்கூடத்தில் செயற்கைப்பொருளாக்கம் செய்யவும் முடிகிற இயற்கை பால்வழி வந்த தயாரிப்பான ‘நூண்ணுயிரி வளர்ச்சித் தடுப்பி’ (nisin) ஆகும். 1960ல் இருந்து நுண்ணுயிரி வளர்ச்சித் தடுப்பி உணவில் காணப்படும் நோய்க்காரணிகளை (pathogens) நீக்குவதற்காக பயன்படுத்தப்படுகிறது.