அடுத்தப் போர்

இராஜ்குமார்
27/07/2017 10:58PM

நியூயார்க் நகரில் ஓர் அணுகுண்டு வீழ்கிறது. சற்று விசாலமாக பார்த்தால் அமெரிக்காவின் 50 மாநில தலைநகரங்களிலும் 50 அணுகுண்டு வீழ்ந்துள்ளது. 2066 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி அன்று இரவு சுமார் 10 மணி அளவில் தொடங்கி 10:30 மணிக்குள் அனைத்து குண்டுகளும் 25 10 கி.மீ சுற்றுவட்டப் பகுதியை சுடுகாடாக ஆக்கியது. 9:00 மணிக்கே தனது உலகளாவிய விண்கலன்களில் இருந்தும், ரேடார்களில் இருந்தும் எண்ணற்ற அணுகுண்டுகள் ஏவப்பட்டதை கண்டு திடுக்கிட்டு முக்கிய இராணுவ, அரசு அதிகாரிகளையும், தன்னாட்டு அதிபரையும் மட்டும் 10 மணிக்குள்ளாகவே அப்புறப்படுத்த முயற்சித்து எப்படியோ பெரும்பாலானோரை அப்புறப்படுத்திவிட்டது. 10:30 முதல் 12 மணிக்குள் அமெரிக்காவின் அனைத்து பெரிய இராணுவத்தளங்களும் தாக்கப்பட்டன. பேரிழப்பில் தொடங்கியது அமெரிக்காவின் காதலர் தினம்!

யார் செய்தார்கள்? இவ்வளவு பெரிய மனசாட்சியற்ற கொடூர தாக்குதலை? ஒரு நாடா? பல நாடா? இல்லை தீவிரவாத இயக்கங்களா? கோடிக்கணக்கில் மக்கள் பொசிங்கினர்! உலகமே வருத்ததால் தொற்றிக்கொண்டது.

குடைந்தனர். அமெரிக்க அதிபரும், அவரது அதிகாரிகளும், தனது நட்பு நாடுகளிடம் தொடர்பு கொண்டு கேட்டறிந்தனர். சிரியா, ஈரான், வட கொரியா, சீனாவின் கடற்பகுதிகள், என்று பல்வேறு பகுதியில் இருந்து இவை ஏவப்பட்டன. இதற்கு பின்னால் எந்நெந்த நாடுகள் உதவி செய்திருக்கும் என கேட்கின்றனர். சீனா கண்டிப்பாக இருக்கும். இரஷ்யா இருக்கலாம்; ஆனால் உறுதியாக தெரியவில்லை. இந்தியா? பாகிஸ்தான்? ஜப்பான்? இல்லை. அவர்கள் பங்கு பெறவில்லை. ஜப்பான் மீது சந்தேகம் உள்ளது. 

உடனடியாக அமெரிக்கா, பிரிட்டனின் உதவி மற்றும் பிற ஐரோப்ப நாடுகளின் உதவியை கேட்கின்றது. உலகமே திடுக்கிட்டு விழித்து கொள்கிறது அதிகாலை. அனைவரும் அச்சத்தில் இருக்கிறார்கள். அமெரிக்காவுடன் உள்ள அணி எந்த நாட்டின் மீது பதில் தாக்குதல் செய்யும் என அனைத்து நாடுகளிலும் உலக நாடுகளில் உள்ள அனைத்து குடிமகன்களும் அஞ்சி நடுங்குகின்றனர்.

அதிகாலை 3 மணிக்கு அமெரிக்க, பிரிட்டன், பிரான்சு மற்றும் பிற ஐரோப்ப நாடுகள் இணைந்து தாக்குதலுக்கு தயாராகுகிறார்கள் ஆனால் தாக்கவில்லை. ஊடங்களின் வாயில் எதிர் அணியினருக்கு அமெரிக்க அதிபர் கூறுகிறார். “கோழைகள், மூர்கத்தனமாக மறைந்து நல்லவர் வேடம் போட்டுக்கொண்டு எங்கள் மீது தாக்கியுள்ளனர். பதிலடி கொடுக்க நாங்கள் தயார். எதிரிகள் தில் இருந்தால் நாங்கள் தான் உங்கள் எதிரிகள் என்று சொல்லிவிட்டு தாக்கட்டும். நாங்கள் எத்தகையத் தாக்குதல்களையும் எதிர்கொள்ளத் தயார்!”

காலை 5 மணியளவில், இரஷ்யா, சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற நாடுகள் இந்த தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என கூறுகின்றனர். மறுநாள் காலை 9 மணிக்கு சீனாவின் அனைத்து படைகளின் மீதும், சிரியா, ஈரான், வட கொரியா மீதும் இன்னும் அமரிக்காவின் கூட்டாளிகளுடன் தாக்குதல் நடக்கின்றன. அமெரிக்காவில் கோடிக்கணக்கில் மக்கள் இறந்ததைப் போலே சீனா, சிரியா, ஈரான், வட கொரியா போன்ற நாடுகளில் தாக்குதல் நடத்தப்படுகின்றன. பேரிழப்பு 4 மடங்கானது!

இந்தியா, இரஷ்யா, ஜப்பான், கனடா, மெக்சிக்கோ, இன்னும் உள்ள அனைத்து நாடுகளும் உடனடியாக ஒன்றிணைந்து இந்தப் போரை நிறுத்தும்படி கூறுகின்றனர். சீனா, “நாங்கள் அமெரிக்காவை தாக்கவில்லை என்று சொல்லியும், அமெரிக்கர்கள் எங்கள் மீது தாக்கியுள்ளனர்.” என்றது. அமெரிக்கா, “ உமக்கு சொந்தமான கடல் பகுதியில் இருந்தும் தான் பல ஏவுகணைகள் தாக்கப்பட்டுள்ளன.” என்றது. சீனா, “அந்த கடல் பகுதிகள் எங்களுடையது என்று கூறி வந்தாலும், அவை எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை.” என்றது.

போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு யார் யாருடன் எதிரி என்றும், யார் உண்மையில் இந்தப் போரை தொடங்கியது என விவாதம் நடந்தது. பேரழிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. காத்திருங்கள் அடுத்தப் போர் யார்மீது?!!