Advertisements:





i
வாழை நாரில் நெசவு நூல் தயாரித்துள்ள ஒரு இந்தியர்

ஆகஸ்ட் 18, 2012 12:44


சென்னை, இந்தியா: வாழை நாரை நெசவு நூலாகவும், அந்நூல்களைக் கொண்டு புடவைகளையும் நெய்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சேகர் என்பவர்.


சேகருக்கு இந்தச் சிந்தனை அவர் நூலகத்தில் ஒரு இராமாயண நூலை படிக்கும் பொழுது தோன்றியதாகக் கூறினார். அந்த இராமாயண நூலில், ஆஞ்சிநேயர் சீதைக்கு வாழைநார் புடவை கொண்டுவந்ததாகக் குறிப்பிட்டுருப்பதை படித்த சேகருக்கு நாம் ஏன் வாழைநாரில் இருந்து புடவை தயாரிக்கக் கூடாது என தோன்றியது எனவும் கூறினார்.


வாழைநாரில் இருந்து புடவை தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்த போது கோவில்பட்டியில் இருந்து வந்த கல்லூரி மாணவர்களுக்கு பருத்தியையும், வாழைநாரையும் சேர்த்த புடவையைத் தயாரிப்பது பற்றிய செயல் திட்டத்திற்கும் உதவி செய்துள்ளார்.


வாழை மட்டையை நாராக முதலில் சுரண்டப்பட்டு, அதனை தனித்தனியாக பிரித்து, பிறகு நூலாக திரிக்க வேண்டும். திரித்த நூலை மரவுருளையில் நூற்கண்டாக சுற்றப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் நூலினால் பிறகு புடைவை தயாரிக்கப்படுகிறது.

 

உலகில் மூன்றாவது மிகப்பெரிய விவசாயமான வாழையில் வீணாவது அதன் நாராகும். இவ்வகையான இயற்கை புடவையினால், வாழை விவசாயத்திற்கும், மனித மேம்பாட்டு வலுவூட்டலுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என அவர் மேலும் கூறினார்.

 வாழைநாரில் இருந்து நூலிழை தயாரித்தது மட்டும் இல்லாமல், அப்புடவைகளுக்கு கற்றாழையில் இருந்து மையையும் தயாரித்துள்ளார் சேகர். கற்றாழைக் கூழை தற்போது முகத்திற்கு பயன்படுத்திறோம். அதில் நாம் பருத்தியை முக்கி எடுக்கப்படுகிற புடவைகள் மிகவும் அற்புதமாக இருப்பதாகக் கூறினார். இவ்வாறு செய்யும் இவரது தயாரிப்புக்களுக்கு நல்ல கிராக்கி இருக்கிறது என்கிறார். அவர்களால் கேட்பவர்களுக்கு சரியான நேரத்திற்குள் கொடுக்கமுடியாத நிலையில் இருக்கும் அளவிற்கு அத்தனை வேண்டுதல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

கற்றாழைச் சாறை நன்கு சூடாக்கி மைத் தயாரிக்கப்படுகிறது. அவ்வாறு தயாரிக்கப்பட்ட மையில் நூலிழைகளை ஊறவைக்கப்பட்டு சாயம் பூசப்படுகிறது. மேலும் இவர்கள் அண்ணாச்சி போன்ற பல பொருட்களில் இருந்தும் தயாரிக்கின்றனர். இது பருத்தி ஆடையை விட முப்பது விழுக்காடு விலையுயர்ந்ததாக இருந்தாலும் உடல் நலத்திற்கு எந்த கெடுதலும் இல்லை என்று கூறியுள்ளார்.

-முற்றிற்று-