முகப்பு
செய்திகள்
துறைகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள்
தொடர்புக்கு
Advertisements:

i
பாக்டீரிய எதிர்ப்புப் பொருட்கள் தசைகளை வலுவிழக்கச் செய்யலாம்

    இராஜ்குமார் 

    ஆகஸ்ட் 22, 2012 18:37

( Antibacterial agent can weaken muscle - A germ-fighting chemical added to many soaps, toothpastes and fabrics can interfere with how muscles contract, new research shows. - sciencenews.org)

ஒரு புதிய ஆய்வானது, பெரும் சவுக்காரங்கள் (soaps), பற்பசைகள் (toothpastes), துணிகள் (fabrics) ஆகியவற்றில் சேர்க்கப்பட்டுள்ள கிருமி தாக்கு பொருளானது தசைகள் சுருங்கக் காரணமாகிறது எனக் கூறுகிறது.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின், (இ)டாவிசு கால்நடை மருத்துவப் பள்ளி நரம்பு நஞ்சியலாளர் (neurotoxicologist) ஐசாக் பெசா (Isaac Pessah) மற்றும் அவரது உடன்பணியாளர்கள் ஆகத்து ௧௩ (August 13) அன்று, எலிகளின் தசைகளையும், குருதி ஓட்டத்தையும் ஆற்றல் குறைவாக்கும் திரிக்லோசன் (triclosan) என அழைக்கப்பெறும் வேதியியல் மருந்துகள், ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மக்களிடம் ஏற்கனவே அளக்கப்பட்டவையுடன் கிட்டத்தட்டப் பொருந்துவதாக அறிவியல் தேசிய மன்ற நடவடிக்கைகள் (Proceedings of the National Academy of Sciences) என்ற இணைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

"எந்த ஒரு உயிரினமும் சரிவர செயல்பட கால்சியம் கட்டுப்பாடே (calcium regulation) அடிப்படையாக இருக்கிறது" என இந்த புதிய ஆய்வில் ஈடுபடாமல் இருக்கும் மின்னெசோட-வில் உள்ள சென்ட்.கிளௌடு பல்கலைக்கழகத்தின் ஒரு நஞ்சியலாளர் மற்றும் தசை செயலியலாளரான ஹெயகோ சொஎந்புஸ் கூறினார். "கால்சியம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது என்று காட்டி, இந்தப் புதிய ஆய்வு ஒரு பண்டோராவின் பெட்டியில் (Pandora's box) உள்ள சாத்தியமான மற்ற விளைவுகளை உடனடியாகத் திறக்கிறது. இது ஒரு பெரிய முன்னேற்றம் இருக்கும்.", என்று மேலும் அவர் கூறினார்.

முன்னரே எலியிலும், மீனிலும் இதனை சோதனை செய்தாலும், தசை செயல்பாடுகளை பழுதாக்கும் இந்த இயங்குமுறையானது மனிதரிலும் காணப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவில் உள்ள மக்களிடம் எடுக்கப்பட்ட திரவ மாதிரிகளில் மூன்றில் ஒரு பங்கு இந்த திரிக்லோசன் இருப்பதாக கணிப்பு கூறுகிறது. "ஆகையால் இந்த புதிய கருத்துக் கணிப்பு தரவு வேதிப்போருளினால் ஏற்படக்கூடிய மனித மற்றும் சுற்றுப்புற சுகாதாரக் கவலைக்கு வலுவான ஆதாரத்தை தந்திருக்கிறது" என பேசா (Pessah) கூறினார்.

நான்கு வருடங்களுக்கு முன்பு, பெசா குழு (Pessah's Team) திரிக்லோசன், பாலூட்டிகளின் உயிரணுக்களில் வெவ்வேறு செயல்பாடுகளை இடையூறு செய்யும் திறனை படித்திருந்தார்.   திரிக்லோசன், உயிரணு வாயில்களின் வழக்கத்திற்கு மாறான சில வகை வலிய செயல்பாடாக இருப்பதாக தெரிகிறது - குறிப்பாக சில உயிரணு செயல்பாடுகளை உயிர்வேதியல் பூட்டினால் இயக்கல் அல்லது அணைத்தல் மாற்றல் சொல்லலாம்.