Advertisements:

i
அசாதாரண தீநுண்மம் பாம்புகளை முடிச்சுகளாக கட்டலாம்
    இராஜ்குமார் 
    ஆகஸ்ட் 19, 2012 18:37

புதிதாக கண்டறிந்த ஒரு உயிரியல் வகுப்பு தீநுண்மமானது (virus) பாம்புகளை அதன் உணவை எதுக்களிக்கும் படியும் , அதனை உணவருந்தாமலும், அதன் உடலை அதாகவே முடிச்சாக கட்டவும் செய்கிறது என கண்டறிந்துள்ளனர்.

சான் பிரான்சிஸ்கோ, கலிபோர்னியா பல்கலைகழகத்தின் ஆய்வாளார்கள், இறுக்கிக் கொல்லி பாம்புகளையும் (boa constrictors), மலைப்பாம்புகளையும் (pythons) தாக்கக்கூடியதும், பாம்பின் உயிரணுவில் புரதக்குவியல்களை உண்டாக்கக்கூடியதுமான ஒரு மரண நோயான உள்ளமைப்பொருள் (inclusion body) நோயுடன் பிடிபட்ட பாம்பினில் மூன்று வகை தீநுண்மங்கள் உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
access 
தீநுண்மத்தின் அசாதாரண மரபணு உருவாக்கம் விஞ்ஞானிகளுக்கு தொன்மாக்களின் (dinosars) காலம்வரை பின்தள்ளும் தீநுண்ம பரிணாம வளர்ச்சிக் குறிப்புகளை தருகிறது.

"அதுலுள்ள அனைத்தும் முற்றிலும் வேறுபட்டதாக, ஏறக்குறைய இனங்கண்டுகொள்ளமுடியதவையாக உள்ளன." ஜோசப் தெரிசி கூறினார். UCSF உள்ள ஹோவர்ட் ஹக்ஸ் மருத்துவ நிறுவனம் துப்பறிவாளரான ஜோசப் தெரிசி, mBio வில் ஆகஸ்ட் 14 இணையவழித் தோன்றும் பணியை தலைமைதாங்கியவர் ஆவார்.

புதிதாக கண்டறி
யப்பட்ட இந்த தீநுண்மம் கொறிணிகளில் (rodents) மட்டும் முன்பே கண்டறியப்பட்ட அரினா தீநுண்ம உயிரியல் வகுப்பைச் சார்ந்ததாக இருக்கிறதாகும். லஸ்சா குருதிப்போக்குக் காய்ச்சலைத் (Lassa hemorrhagic fever) தரக்கூடிய ஒன்றான இந்த அரினா தீநுண்மம் சிலநேரங்களில், மனிதர்களையும் தாக்ககூடியதாகும்; ஆனால் இதற்குமுன் இந்த தீநுண்மங்களை ஊர்வனவற்றில் கண்டறியப்படவில்லை.

ஆனால் அரினா தீநுண்மங்களில் காணப்படாத ஒரு பண்பு, அதாவது முற்றிலும் வேறுபட்ட உயிரியல் வகுப்பைச் சேர்ந்த பிலோ தீநுண்மங்களில் (filovirus) உள்ள எபோலா (Ebola) என்ற ஒரு உயிரணு காணப்படுகிற

து. "தீநுண்மவியலாளர்கள் ஒருபோதும் இவ்விரு உயிரியல் வகுப்பின் மரபணுக்களை இடமாற்றம் செய்யலாம் என எண்ணியதில்லை" என்று நியூ ஆர்லியன்சின் லூயிஸியான ஸ்டேட் யுனிவர்சிட்டி ஹெல்த் சயின்ஸஸ் சென்டரில் உள்ள தீநுண்மவியலாளர் மற்றும் ஓய்வுபெற்ற பேராசிரியரான வில்லியம் கல்லஹெர் சொல்கிறார்.

கூட்டு பாம்பு தீநுண்மத்தின் விளைவாக, எபோலா நெடுநாட்களுக்கு முன்பே அரினா தீநுண்மத்துடன் கலந்திருக்க வேண்டும். ஆனால் கல்ல
ஹெர் வாய்ப்பு குறைவாகவே உள்ளது என நினைக்கிறார்கள். இரண்டு தீநுண்மம் வகைகளும் வெவ்வேறு உயிரியலை கொண்டுள்ளது, அதே நேரத்தில் இரண்டும் ஒரே உயிரணுவில் மரபணுப் பொருட்கள் கலப்பதற்கு செயலாற்றும் என்பதை காண்பது சாத்தியமில்லை என அவர் சொல்கிறார்.

தெரிசி இன்னொரு வாய்ப்பிருக்கிறது என நெகிழ்கிறார்: அநேகமாய் அரேனா தீநுண்மங்களுக்கும், பிலோ தீநுண்மங்களுக்கும் இந்த பாம்பு தீநுண்மங்கள் முன்னோடியாக இருக்கலாம். "ஒரு வேலை நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது மிகப்பழைய ஒரு தொன்மாக்களின் தீனுன்மமாக இருக்கலாம்" என கூறினார்.

அல்லது இது உண்மையாகவே அரினா தீநுண்மம் எப்படி வருகிறதோ அதேபோல் பாதிக்கப்பட்ட கொறிணிக்களில் இருந்து பாம்புக்களுக்கு வந்திருக்கலாம். தீனுண்மங்கள் பாதிக்கப்பட்ட கொறிணிக்களை பாம்பு வேட்டையாடித் தின்றிருந்தால் அப்பாம்புகளுக்கும் அத்தீநுண்மம் வருவதற்கு வாய்ப்புள்ளது என தெரிசி ஆய்வுக்கூடத்தில் பணியாற்றும் மற்றொரு தீநுண்மவியலாளர் மார்க் ச்ட்டேன்குளின் கூறினார். "நாங்கள் இதனை கொறிணி பழிவாங்கு கருதுகோள் என அழைப்போம்".

தற்கால எலிகள் மூலம் இந்த நோயை பாம்புகளுக்கு கொண்டுசெல்வதற்கு எந்த ஆதாரமும் இல்லை ச்ட்டேன்குளின் கூறுகிறார். ஆனாலும் உள்ளமைப் பொருள் நோய் கொண்ட பாம்பில் கண்டறியப்பட்ட இந்த தீநுண்மங்கள் தான் அந்த நோயை உண்டாக்கியது எனவும் சொல்லயியலாது. அடுத்தக் கட்டமாக நாங்கள் நலமாக இருக்கும் பாம்பில் இந்த தீநுண்மங்களை தாக்கச் செய்து அவை வளர்கிறதா என பார்க்கப் போகிறோம் என அவர் கூறினார்.

இது தனித்துவமாக இருக்கிறது, அநேகமாய் இது ஒரு புது உயிரியல் வகுப்பாக இருக்கலாம் என தெரிசி கூறினார். ஆயினும் இது ஒரு புதிய உயிரியல் வகுப்புதானா எனத் தீநுண்ம நஞ்சியலின் உலகளாவிய நிபுணர் குழு முடிவாக சொல்வார்கள் என அவர் கூறினார்.

- முற்றிற்று -