தனித்தமிழ் கணிதம் - ௧

 - இராஜ்குமார்

தி.ஆ : ஆவணி ௧௧, ௨௦௪௨.
ஞாயிறு - கார்காலம்.

எண்கள் உயிரும் உயிர்மெய்யுமாம் 
மாறிலிகள் மெய்களாம்
முதல் உயிர்மெய் ஒன்றாம்
உகரம் இரண்டாம் 
ஙகரத்தின் கடைக்கோடு தேய மூன்றாம்
சகரத்தின் கடையில் சிறுகோடு மேல்நோக்க நான்காம் 
இரகர உகரம் ஐந்தாம் 
சகரத்தின் உகரக் கொம்பிரட்ட ஆறாம் 
எகரம் ஏழாம் 
அகரம் எட்டாம் 
ககரக் கொம்பிரட்ட தொன்பதாம் 
சுழித்தல் இன்மையான சுழியமாம் 

தமிழ் கணிதத்திற்கு வேர்களாக இருக்கும் எண்களை தெளிவு படுத்திக்கொள்வது நன்று என்பதனாலும், இக்காலத்தில் தமிழ் எண்கள் பயன்பாட்டில் இல்லை என்பதனாலும், எதிர்கால தமிழர்களுக்கு பயன்படும் என்பதாலும் மேலுள்ளவற்றை படைத்தேன் என்று கொள்க.

மாட்டுவண்டி:

நம் மாட்டுவண்டிச் சக்கரத்தின் விட்டம் மூன்றரை முழம் என்று கூறப்படுகிறது. ஏன் மூன்றரை விட்டம் வைத்தார்கள் என்று கணக்கு போட்டு பார்த்தால் அதன் உள்நோக்கம் புரிகிறது.

சக்கரத்தின் விட்டம் = ௩.௫ முழம் = ௩ ௧/௨ முழம்.

வ் = ௩.௫ 

 என்பதும் முழ அலகின் குறியீடு.

சரி, நாம் இப்பொழுது மாட்டுவண்டி சக்கரத்தின் வட்டச் சுற்றளவை (ச் ) கணிப்போம். நான் முந்தைய பதிவில் கூறியிருந்தது போல் வட்டக்கணக்கின் அடிப்படை சமன்பாட்டை நினைவுபடுத்த வேண்டுகிறேன்.

அரைச்சுற்றளவு = விட்டம் + ௪/௭ * விட்டம் = வ் + ௪/௭ * வ்

இந்த சமன்பாட்டில் மாட்டுவண்டியின் விட்டத்தின் மதிப்பைப் (வ் = ௩.௫ ) பொருத்தினால் நாம் அரைவட்டச் சுற்றளவை கண்டறியலாம். 

அரைச்சுற்றளவு = ௩.௫ + ௪/௭ * ௩.௫ ழ = .௫ 

அவ்வாறே முழுச் சுற்றளவு ,

ச் =  * அரைச்சுற்றளவு =  * .௫  = ௧௧ 

ஆக மாட்டு வண்டிச்சக்கரத்தின் சுற்றளவு பதினோரு முழமாகும்.

சரி, ஏன் பதினோரு முழம் சுற்றளவு ? ஏனென்றால் விட்ட அளவை ஏழாக வகுக்க வேண்டியிருப்பதால் பின்னங்கள் வராமல் இருக்க வேண்டும் என்பதாலும் ஆகும். ஆகையால் விட்டத்தை ௩.௫,௭,௧௦.௫, என்று செல்லும் தொடர் வரிசைகளில் ஒரு எங்களை விட்டமாக தேர்ந்தெடுத்துள்ளனர்.

seperator