தமிழ் கணிதம் : நவீன பின்ன எழுத்துக்கள்

இராஜ்குமார்

THURSDAY, 22 JULY 2010


கடுகுப் பதிவு இது . இதில் நமது கணித முறைப்படி பத்தில் ஒன்றுக்கு , நூற்றில் ஒன்றுக்கு, ஆயிரத்தில் ஒன்றுக்கு , பத்தாயிரத்தில் ஒன்றுக்கு என்று நீளும் எண் வரிசையை எப்படி பெயரிடலாம் என்று பார்க்கலாம் . இந்த எண்ணிக்கைக்கு அடிப்படையாக நமது முன்னோர்களின் பின்ன எழுத்துக்களில் ஒன்றான ' மா ' என்ற சொல்லை தேர்ந்தெடுத்து இருக்கிறேன் .

பின்வருவனவற்றை அறிய , முதலில் இந்த 'மா' என்ற பின்னத்தின் வடிவத்தையும் , மதிப்பையும் அறிதல் நன்று . இதன் வரி வடிவமும் , மதிப்பும் மேல் உள்ள படத்தில் உள்ளவாறு இருக்கும் . ஆகவே ஒரு 'மா'வின் மதிப்பு இருபதில் ஒன்றாகும் . இதனை முற்கால திண்ணைப் பள்ளிகளில் ஒருமா , இருமா , காணி , முக்காணி , அரைக்கால் என்றெல்லாம் வாய்ப்பாடு செய்து படித்து வந்தனர் . இந்த வாய்ப்பாட்டின் இரு வரியை மதராசப்பட்டினம் திரைப்படத்தில் இடம்பெற்ற 'மேகமே ' என்ற பாடலின் இடையில் இடம்பெறும் காணலாம் . பின் 'இருமா'வின் மதிப்பும் , வரிவடிவமும் பின் வருமாறு இருக்கும் .

இதன் அடிப்படையில் உருவாக்கியதே , பின்னால் நான் குறிப்பிடப் போகும் பின்ன வரிசைகள் . ஆக நாம் பத்தில் ஒன்றின் பெயரையும் , வரிவடிவத்தையும் கண்டரிந்துவிட்டோம் . இது போதும் , நாம் மேலே குறிப்பிட்ட பின்ன வரிசையினை எளிதாகவே பெயரிடலாம் . அவ்வாறாக , நாம் நூற்றில் ஒன்றை இரண்டு முறை இந்த இருமாவை பெருக்கிச் சொல்லலாம் . ஆயிரத்தில் ஒன்றை மூன்று முறை பெருக்கினால் கண்டறியலாம் . பின்வருவனவற்றை காண்க.

1/10 - பத்தில் ஒன்று
1/10*1/10 - நூற்றில் ஒன்று
1/10*1/10*1/10 - ஆயிரத்தில் ஒன்று

இந்த வரிசைகளை இருமாவை வைத்து பெயரிட்டால் ,

1/10 - ஒருபடி இருமா
1/100 - இருபடி இருமா
1/1000 - முப்படி இருமா
1/10000 - நாப்படி இருமா
1/100000 - ஐம்படி இருமா
1/1000000 - அறுபடி இருமா
1/10000000 - எழுபடி இருமா
1/100000000 - எண்படி இருமா
1/1000000000 - ஒன்பதுபடி இருமா
1/10000000000 - பத்துப்படி இருமா
1/100000000000 - பதினோருபடி இருமா


இவ்வாறு பெயரிடலாம் .

10-1
ஒருபடி இருமா  
10-2
 இருபடி இருமா 
Centi
10-3
முப்படி இருமா 
Milli
10-4
நாப்படி இருமா 

10-5
ஐம்படி இருமா 

10-6
அறுபடி இருமா 
Micro
10-7
எழுபடி இருமா 

10-8
எண்படி  இருமா 

10-9
ஒன்பதுபடி இருமா 
Nano
10-10
பத்துப்படி  இருமா 

10-11
 பதினோருபடி இருமா 

10-12
பன்னிரண்டுபடி இருமா 
pico
10-13
பதிமூன்றுபடி இருமா 

10-14
பதினான்குபடி இருமா 

10-15
பதினைந்துபடி இருமா femto

இவை மேலும் சில மாற்றங்கள் செய்து புதிய சொற்களை வெளிக்கொண்டுவர முனையலாம் . இதையெல்லாம் முதலில் தொடங்க நாவும் , விரலும் கூசுதல் இயல்பே. அதுவும் இம்மோக நிலையில் .

     
seperator