முகப்பு
செய்திகள்
கட்டுரைகள்
தரவுத்தாள்கள்
மதிப்புக் கூட்டு பாடங்கள்
சின்ன சின்ன செய்திகள்
தொடர்புக்கு

Science Direct

Advertisements:
நாளமில்லாச் சுரப்பிகள்

(endocrine glands)

- இலக்குவனார் திருவள்ளுவன் 


செப்டெம்பர் 5, 2012  17:26  இந்தியத் திட்ட நேரம்


உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் அமைவன, நரம்பு மண்டிலமும் அகச்சுரப்பி மண்டிலமும் ஆகும்.

உடலுக்கு மிகவும் இன்றியமையாத சில நீர்கள் உடலில் சுரக்கின்றன. இவ்வாறு 50க்கும் மேற்பட்ட இயக்கு நீர்கள் உள்ளன. ஆர்மோன்கள் என இவற்றை ஒலிபெயர்ப்பு செய்யாமல் சுரப்பம் எனக் குறிப்பதே பொருத்தமாக இருக்கும். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுரப்பியில் சுரக்கின்றன. இவை குறைந்தாலும் தேவைக்கு மிகுந்தாலும் உடல் நிலைக்கு ஊறு ஏற்படுத்துகின்றன.

இவை சுரக்கும் சுரப்பிகள் இருவகைப்படும். இச்சுரப்பங்கள், நாளங்கள் மூலம் வெறி யேறினால் அவை நாளச்சுரப்பிகள்; நளங்கள் இன்றி நேரடியாக அயம் குருதியில் சேர்ந்தால் இச்சுரப்பிகள் நாளமில்லாச் சுரப்பிகள் ஆகும்.

நம் உடலில் உள்ள சுரப்பிகள் வருமாறு :-

01. மூளையடிச் சுரப்பி

02. கேடயச் சுரப்பி

03. இணை கேடயச் சுரப்பி

04. சிறுநீரக மேல் சுரப்பி

05. கணையம்

06. சூல்பை (பெண்)

07. விதைப்பை (ஆண்)

08. சிறுநீரகம்

09. உவளகச் சுரப்பி

10. கணைநீர்த்திட்டு

11. கழுத்துக் கணையச் சுரப்பி

இவற்றுள்

மூளையடிச் சுரப்பி என்பது நாளமில்லா உட்சுரப்பி ஆகும்;மூளைக்கு

அடியில் உள்ளது. தூண்டிகளையும் புரதங்களையும் சுரக்கின்றது. எலும்பு

வளர்ச்சி, இனப் பெருக்க வளர்ச்சி ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகின்றது.

கேடயச் சுரப்பி எனப்படும் தொண்டைச்சுரப்பி, மூச்சுக் குழலுக்கு அருகில்

உள்ளது: இரு மடல்களால் ஆனது. உடல் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம்,

ஆகியவற்றை ஒழுங்குபடுத்துகிறது; அறிவாற்றலுக்கும் நினைவாற்றலுக்கும்

இதுவே காரணமாய் அமைகிறது. இச்சுரப்பி நீர் குறைந்தால் கழலையும்

குருளைத் தன்மையும் ஏற்படும்.

சிறுநீரக மேல் சுரப்பி, ஒவ்வொரு சிறுநீரகத்தின் மேலும் முக்கோண

வடிவில் அமைந்திருக்கும். அகணி, புறணிஎன இரு பகுதிகள் கொண்டது.

கணையத்தில் சுரப்பது, கணைய நீர் ஆகும். இந்நீர் மாப்பொருளையும்

புரதத்தையும் கொழுப்பையும் செரிக்க வைக்கிறது.